Healthy food Tamil News: நீங்கள் பேரீட்சை விரும்பி என்றால் அவற்றை உண்ண இதுவே சரியான நேரம். இவற்றில் ஏரளமான மருத்துவ நன்மைகள் உள்ளது என குறிப்பிட்டுள்ள பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் அவற்றை ஏன் நாம் மழைக்காலங்களில் உண்ண வேண்டும் என்பதற்கான காரணங்களை இங்கு வழங்கியுள்ளார்
மழைக்காலங்களில் பேரீட்சை உண்பதற்கான 5 காரணங்கள்.
- ஹீமோகுளோபின் (Hb) மற்றும் ஆற்றல் மட்டங்களை மேம்படுத்துகிறது.
- தூக்கக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
- பெரும்பாலான நோய்த்தொற்றுகள் மற்றும் ஒவ்வாமைகளை எதிர்த்துப் போராடுகிறது.
- உடற்பயிற்சி செயல்திறனை அதிகரிக்கிறது.
- மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
பேரீட்சையின் பயன்கள்
பேரீட்சை பழங்கள் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தவையாக உள்ளன. இவை நமது இனிப்பு பசிக்கு சரியான மற்றும் ஆரோக்கியமான மாற்றாகவும் உள்ளன. உண்மையில், நீரிழிவு நோயாளிகளும் இந்த பழத்தை குறைவான கிளைசெமிக் குறியீட்டால் சாப்பிடலாம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இதில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் அல்லது இயற்கையாக நிகழும் தாவர இரசாயனங்கள் கொலஸ்ட்ராலைக் குறைக்க மேலும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
பேரீட்சை உண்ண சிறந்த நேரம்
- காலையில் வெறும் வயிற்றில் உண்ணலாம்.
- ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் மதிய உணவுக்கு பதிலாக பேரீட்சை எடுத்துக்கொள்ளலாம்.
- குழந்தைகள் பருவ வயதிற்குள் இருந்தால், இவற்றை மதிய முன்னதாக சாப்பிடலாம்
"நீங்கள் கடைகளில் இருந்து வாங்கும் பேரீட்சை புதியவையாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். அவற்றை விதைகைளை சேமித்து உங்கள் வீட்டிலேயே பயிரிடலாம்" என திவேகர் பரிந்துரை செத்துள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“