தயிருடன் சர்க்கரை… தேர்வுக்கு செல்லும் முன்பு தேவையான உணவுகள் எவை தெரியுமா?

yoghurt recipe Tamil News: தேர்வு நேரத்தில் சரியான ஊட்டச்சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஞாபக சக்தியை அதிகப்படுத்தமுடியும் என்றும் மன அழுத்தத்தை குறைக்க முடியும் என்றும் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கனேரிவால் தெரிவித்துள்ளார்.

Healthy food Tamil News yoghurt recipe summer recipes curd with sugar

Healthy food Tamil News: மார்ச் – ஏப்ரல் மாதம் வந்தாலே தேர்வுகாலம் தொடங்கிவிடும். தேர்வுகள் என்றதுமே மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்படும். இதனால் அவர்களால் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்படும். இதன் விளைவாக அவர்களுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்பட வாய்ப்புண்டு. சரியாக தேர்வுக்கு தயாரான மாணவர்களால் கூட இந்த பிரச்னைகளின் காரணமாக சரியாக தேர்வு முடியாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.

தேர்வு நேரத்தில் சரியான ஊட்டச்சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஞாபக சக்தியை அதிகப்படுத்தமுடியும் என்றும் மன அழுத்தத்தை குறைக்க முடியும் என்றும் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கனேரிவால் தெரிவித்துள்ளார்.

தேர்வுகளுக்கு எப்படி குறுக்கு வழிகள் இல்லையோ, அதேபோல் உணவு பழக்கத்திற்கும் குறுக்கு வழிகள் இல்லை. தற்போது ஊட்டச்சத்து நிபுணர்கள் தேர்வு காலங்களுக்கு ஏற்ப உணவு பழக்கங்களில் சில மாற்றங்களை பரிந்துரைக்கின்றனர். அதன் மூலம் பசி தீர்ந்தது மட்டுமின்றி ஞாபக திறனையும் அதிகரிக்கலாம்.

ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கனேரிவால் உணவு முறைகள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவற்றை பற்றி தற்போது பார்க்கலாம்.

சூடான காலை உணவு (வீட்டில் சமைத்தது)

தானியங்கள் மற்றும் உடனடி ஓட்ஸ் போன்ற அடைத்து வைக்கப்பட்ட உணவுகளில் உள்ள செயற்கை மூலக்கூறுகளை நம் உடலும் மூளையும் ஏற்றுகொள்ளாது. அதனை உட்கொள்வதால் உடல் மந்தமாக காணப்படும். அதற்கு பதிலாக புதிய போஹா அல்லது உப்புமாவை உட்கொள்ளலாம்.

நெய்

ஒரு தேக்கரண்டி நெய்யை காலை மற்றும் மதிய உணவுகளில் சேர்ப்பதன் மூலம் ஞாபக திறன் அதிகரிக்கும் மற்றும் சிறப்பாக செயல்பட முடியும். ஏனெனில் நெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது.

தயிர்

தேர்வுக்கு வருவதற்கு முன் தயிர்-சர்க்கரை தவற விடாதீர்கள் என்று கனேரிவால் கூறுகிறார். பெரும்பாலான இந்திய குடும்பங்கள் எந்தவொரு முக்கிய வேலையை தொடங்கும் முன் தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளார்கள். தயிரில் உள்ள உயிர் பாக்டீரியா இரைப்பையில் சிறப்பாக செயல்படுவதுடன், செரட்டோனின் ஹார்மோன் வெளியிட்டை மேம்படுத்தி தேர்வுகளின்போது ஏற்படும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

சுத்திகரிக்கபடாத சர்க்கரை (அல்லது) காண்ட்

லட்டு, கடலைமிட்டாய்(சிக்கி), எலுமிச்சை சாறு போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை சீராக்கலாம். சர்க்கரை உடல் மற்றும் மூளையை புத்துணர்வாக்குகிறது மற்றும் நீண்ட நேரம் படிப்பதற்கான மன திறனை வழங்குகிறது.

அரிசி

இரவு உணவுக்கு பருப்பு, அரிசி, கிச்சடி, நெய்,தயிர்சோறு போன்றவற்றை கனேரிவால் குறிப்பிடுகிறார். அரிசியில் ப்ரீபயாடிக் இருப்பதால் அது வயிற்றை லேசாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் நல்ல உறக்கத்தை தூண்டி அடுத்தநாள் புத்துணர்வாக செயல்பட உதவுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” ( https://t.me/ietamil )

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Healthy food tamil news yoghurt recipe summer recipes curd with sugar

Next Story
காபி பொடி, தேன், தயிர் போதும்.. பளபளக்கும் சருமம் நிச்சயம் – திருமணம் ஷ்ரேயாவின் ஹோம் ரெமடிஸ்Thirumanam fame Shreya Anchan Beauty Secrets Home Remedies Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express