பலர் இதய ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க விரும்புகிறார்கள், ஆனால் ஆரோக்கியமற்ற இதயத்தைக் குறிக்கும் அறிகுறிகளைப் பற்றிய குறைந்த அறிவைக் கொண்டுள்ளனர்.
ஷாலிமார் பாக் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மருத்துவர் நித்யானந்த் திரிபாதி ஒரு முக்கியமான தலைப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்:
குளியலறையில் மாரடைப்பு மற்றும் கார்டியாக் அரஸ்ட் விகிதம் அதிகமாக உள்ளது. அதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா, அப்படியானால், அது ஏன் நடக்கிறது?
மருத்துவரின் கூற்றுப்படி, கார்டியாக் அரஸ்ட் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது இதயம் துடிப்பதை நிறுத்தும் ஒரு நிலை, அது நிகழும்போது, அத்தியாவசிய உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தம் கிடைக்காது, இது மயக்கம் மற்றும் உயிர் இழப்புக்கு வழிவகுக்கிறது.
“மறுபுறம், மாரடைப்பு’ இதயத்தின் ஒரு பகுதிக்கு இரத்தத்தை வழங்கும் இரத்த நாளத்தில் திடீரென உறைதல் ஏற்படுவதால், இதயத்தின் ஒரு பகுதி ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தத்தைப் பெறுவதை நிறுத்துகிறது. இவை இரண்டுமே உயிருக்கு ஆபத்தானவை.
பெரும்பாலான மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் அல்லது 2 சதவிகித நேரத்தை கழிப்பறையில் செலவிடுகிறார்கள். ஆனால், மாரடைப்பு மற்றும் கார்டியாக் அரஸ்ட் ஆகியவை அதிக ஃபிரிக்வன்சியில் 8 முதல் 11 சதவீதம் வரை நிகழும் இடமாக கழிப்பறை இருக்கிறது என்று மருத்துவர் கூறுகிறார்.
குளியலறைகள் தனிப்பட்ட இடங்கள் என்பதால், கண்டறிவது மற்றும் உயிர் காப்பது எப்போதும் தாமதமாகிறது, அதனால் விளைவுகள் மோசமாக இருக்கும்.
நிபுணரின் கூற்றுப்படி, கழிவறையில் மாரடைப்பு மற்றும் திடீர் மரணம் ஏற்படுவதற்கு மிகவும் பொதுவான காரணம் மலம் கழிப்பதன் விளைவாகும்.
சிம்பதெட்டிக் மற்றும் பாராசிம்பதெட்டிக் தன்னியக்க நரம்பு மண்டலத்திற்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வு காரணமாக, ஸ்ட்ரேயினிங் போது இரத்த அழுத்தம் குறைகிறது. இது மூளைக்கு இரத்த ஓட்டம் குறைவதற்கும் சுயநினைவை இழப்பதற்கும் வழிவகுக்கிறது. இந்த நிகழ்வுகள் கழிப்பறை மற்றும் குளியலறையில், திடீரென இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் கார்டியாக் அரெஸ்டுக்கு வழிவகுக்கும், ”என்று அவர் விளக்குகிறார்.
மேலும், உடம்பு சரியில்லாம போவது, குமட்டல்/வாந்தி, மற்றும் மயக்கம் போன்ற உணர்வுகளுக்குப் பிறகு கழிப்பறைக்கு விரைந்திருக்கலாம்.
மிகவும் குளிராகவோ அல்லது மிகவும் சூடாகவோ குளிப்பது – இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த ஓட்டத்தின் விநியோகத்தை பாதிக்கலாம்.
மிகவும் குளிர்ந்த நீரில் குளிப்பது, தலையை நோக்கி அனைத்து பக்கங்களிலிருந்தும் இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கும், தமனிகள் மற்றும் நுண்குழாய்களில் அழுத்தத்தை அதிகரிக்கும், இது இதய நிகழ்வுகளை ஏற்படுத்தக்கூடும்.
டாக்டர் திரிபாதியின் கூற்றுப்படி, மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:

* மலம் கழிக்கும் போது அல்லது சிறுநீர் கழிக்கும் போது ஒருவர் அதிகம் சிரமப்படக்கூடாது. நிதானமாக உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
* மிகவும் சூடான அல்லது மிகவும் குளிரான தண்ணீரைத் தவிர்க்கவும். தலையில் நேரடியாக தண்ணீர் ஊற்ற ஆரம்பிக்க வேண்டாம்; கால்கள் அல்லது தோள்பட்டை கழுவி படிப்படியாக மேலே செல்லுங்கள்.
* குளியலறையில்/கழிப்பறையில் குளிர்ச்சியான சூழலுக்கு வெளிப்படுவதைத் தவிர்க்கவும், குறிப்பாக குளிர்காலத்தில், இது மாரடைப்பைத் தூண்டும்.
* நீங்கள் பாதிக்கப்படக்கூடிய பட்டியலில் இருந்தால், முந்தைய மாரடைப்பு, ஆஞ்சினோ, முதுமை, உங்கள் ஹார்ட் பம்பிங் சக்தி பலவீனமாக இருந்தால், உங்களுக்கு பக்கவாதம் அல்லது பல நோய்த்தொற்றுகள் இருந்தால், கழிப்பறை / குளியலறையைப் பயன்படுத்தும் போது கதவைப் பூட்டாமல் இருப்பது புத்திசாலித்தனம். .
பாதிக்கப்படக்கூடியவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள்/குளியலறைகளில் அலாரங்கள் இருக்க வேண்டும், இதனால் சரியான நேரத்தில் உதவி கிடைக்கும்.
இதையும் படியுங்கள்: குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறதா?
இந்த 10 அறிகுறிகள் இருந்தா உடனே மருத்துவரை பாருங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“