Home remedy for stomach pain jeera water boost digestion Tamil News : பண்டிகைக் காலம் நெருங்குகிறது. இந்த நேரத்தில் விதவிதமான உணவுப் பதார்த்தங்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவீர்கள். ஆனால், வயிறு சீராக வேலை செய்யவேண்டும் என்கிற எண்ணமும் ஒருபக்கம் இருக்கும். இருந்தாலும், சில பல வயிற்றுப் பிரச்சனைகளை எதிர்கொள்வதுண்டு. வயிறு வலிகளுக்கு மக்கள் பொதுவாக மருந்துகளை வாங்கும் போது, அதில் வீட்டு வைத்தியங்களும் அடங்கும். அதிலும், எளிதில் கிடைக்கக்கூடிய பொருள்களை வைத்து விரைவில் குணமாகும் என்றால் அதனை வேண்டாம் என்று சொல்ல முடியுமா?
வயிற்று வலிக்குத் தீங்கற்ற தீர்வை நீங்கள் விரும்பினால், இந்த செய்முறை உங்களுக்கானது.
வயிற்று வலிக்கான சீரகம் - சோம்பு நீர்:
இந்த விரைவான செய்முறைக்கு ஐந்து எளிய பொருட்கள் போதும்...
ஜீரா அல்லது சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
மிளகு - 4
கிராம்பு- 3
அஜ்வைன் தண்ணீர் - சிறிதளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்
5-7 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்
பிறகு அடுப்பை சிம்மில் வைத்து 3-4 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்
இப்போது இந்த கஷாயத்தை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
அவ்வளவுதான்... உங்கள் வயிற்று வலி சட்டென மாயமாக மறைய இதனை சூடாகப் பருகவும்.
சிறந்த நிவாரணத்திற்கு இந்த கஷாயத்தை ஒரு நாளைக்கு மூன்று முறை குடியுங்கள். பெரியவர்களும், 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் இந்த பானத்தை தாராளமாகக் குடிக்கலாம். இது, குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் வயிற்று வலிக்கு ஒரு எளிய சக்திவாய்ந்த தீர்வு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil