Advertisment

உடல் எடையும் குறைக்கணும்… மாம்பழமும் சாப்பிடணும்… அப்போ இத ஃபாலோ செஞ்சா போதும்

Mango reduce weight: உடல் எடை அதிகரிக்காத வகையில், மாம்பழத்தை சாப்பிடுவதற்கான சிறிய டிப்ஸ்களை இங்கே காணலாம்

author-image
WebDesk
Apr 25, 2022 07:10 IST
உடல் எடையும் குறைக்கணும்… மாம்பழமும் சாப்பிடணும்… அப்போ இத ஃபாலோ செஞ்சா போதும்

கோடை காலத்தில் மாம்பழ சாப்பிட அனைவருக்கு அவ்வளவு ஆசையாக இருக்கும். இனிப்பு சுவைகொண்ட மாம்பழ சீசன் எப்போ வரும் என காத்திருப்போம். இருப்பினும் மாம்பழம் சாப்பிட்டால் எடை அதிகரிக்கும் என்கிற பயமும் பலருக்கு உண்டு என்பதால் தவிர்த்து வருவார்கள். ஆனால் உண்மையில், தாராளமாக டையர் பிளானில் மாம்பழத்தை சேர்த்துக்கொள்ளலாம். மாம்பழத்தில் பல ஆராக்கிய நன்மைகள் உள்ளன. இருப்பினும், உடல் எடை அதிகரிக்காத வகையில், மாம்பழத்தை சாப்பிடுவதற்கான சிறிய டிப்ஸ்களை ஊட்டச்சத்து நிபுணர் Lovneet தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

Control your portions

மாம்பழங்களில் நுண்ணூட்டச்சத்துக்கள், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது. எனவே, அவற்றை நீங்கள் டையட்டில் இருந்தாலும் தாராளமாக சாப்பிடலாம். ஆனால், சிறியளவில் தான் சாப்பிட வேண்டும். ஒரே நேரத்தில் அதிகப்படியான மாம்பழத்தை சாப்பிடக்கூடாது. சொல்லப்போனால், எந்த உணவும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு நல்லது கிடையாது. அதிகமாக சாப்பிடுகையில், உங்கள் டையர் பிளானின் பலனை பெற முடியாமல் போய்விடும்.

Don't eat with or after a meal

இந்தியர்கள் பெரும்பாலும் மாம்பழத்தை ஆம் ராஸ் வடிவில் அல்லது மதிய உணவு அல்லது இரவு உணவின் போது சிறிய துண்டுகளாக கட் செய்து சாப்பிடுகிறார்கள். ஆனால், உணவுடன் மாம்பழம் சாப்பிட்டால் உடலில் கேலோரிகள் அதிகமாகிவிடும்.

Eat it as a snack

மாம்பழத்தை மாலை ஸ்நாக்ஸாக சாப்பிடலாம். ஒரு கப்பில் மாம்பழம் சாப்பிடுவது ஆரோக்கியமான உணவாகும். நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மாம்பழம் சிறந்த சிற்றுண்டி ஆகும். மேலும் மாம்பழம் ஆற்றலை அதிகரிக்கும் என்பதால், உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு அதனை உட்கொள்வது பெஸ்ட் ஆப்ஷன் ஆகும்.காலை உணவுக்கு தயிர் பர்ஃபைட் அல்லது ஸ்மூத்தியாகவும் மாம்பழத்தை சாப்பிடலாம்.

Eat in whole form

மாம்பழத்தை ஜூஸாக மாற்றும்போது, அதிலிருக்கும் நார்ச்சத்து போய்விடுகிறது. இதனால் முழுமையான மாம்பழ பலன் கிடைக்காமல் செல்கிறது. எனவே, மாம்பழங்களை அப்படியே மாலை சிற்றுண்டியாக சாப்பிடுவது சிறந்த தேர்வாகும்.

கோடை காலத்தை ஆரோக்கியமான முறையில் அனுபவிக்க இந்த குறிப்புகளை பின்பற்றவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Lifestyle Update #Health Benefits #Healthy Food Tips #Healthy Life #Healthy Food Tamil News 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment