இட்லி பொடியெல்லாம் ஒன்னுமே இல்ல! 2 நிமிசத்தில் செம்ம டேஸ்ட்டான பூண்டு பொடி செய்வது எப்படி?

How to make poondu podi, health benefits of garlic: பூண்டில் உள்ள அல்லிசின் போன்ற கந்தகங்களைக் கொண்ட சேர்மங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் உடலுக்கு தேவையான துத்தநாகச் சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன.

உலகின் ஒவ்வொரு உணவுகளிலும் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. இது உணவுக்கு கூடுதல் சுவையை சேர்க்கிறது. அதோடு உங்கள் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

ஆரம்பகால நாகரிகங்கள் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு பூண்டை பயன்படுத்தின. பூண்டு இரத்த அழுத்தத்தைக் குறைத்து தமனிகளின் கடினப்படுத்துதலை குறைக்கிறது.

பூண்டில் உள்ள அல்லிசின் போன்ற கந்தகங்களைக் கொண்ட சேர்மங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் உடலுக்கு தேவையான துத்தநாகச் சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன.

பூண்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய அங்கமான ‘நேச்சுரல் கில்லர் செல்கள்’ செயல்பாட்டைத் தூண்டுகிறது, இது ஃப்ரீ ரேடிகல்கள் மற்றும் வைரஸ் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கிறது.

இப்படி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பூண்டைக் கொண்டு சுவையான பூண்டு பொடி செய்யலாம். இது இட்லிப் பொடிக்கு சிறந்த மாற்றாக இருக்கும். வாருங்கள் பூண்டு பொடி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.  

தேவையான பொருட்கள்

பூண்டு – 30 – 40 பல் (தோல் உரிக்காதது)

காய்ந்த தேங்காய் – 200 கிராம்

நிலக்கடலை – 200 கிராம்

காய்ந்த மிளகாய் – 10

மல்லி – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

பூண்டு, காய்ந்த தேங்காய், நிலக்கடலை, காய்ந்த மிளகாய் மற்றும் மல்லியை தனித்தனியாக ஒரு வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அவற்றை  நன்றாக ஆற வைக்க வேண்டும்.

பின்னர், அவற்றை ஒன்றாக சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மிக்ஸியில் அரைக்கும் போது, அதிகமாக அரைத்து விடக்கூடாது. தூள்களாக இருக்குமாறு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது சுவையான சத்தான பூண்டுப் பொடி தயார்.

இதனை ஒரு மாதம் வரையிலும் வைத்து பயன்படுத்தலாம். இதன் சிறப்பம்சமே, இதனை இட்லிக்கு பயன்படுத்தும் போது பூண்டுப் பொடியில் எண்ணெய் சேர்க்க தேவையில்லை.

சாதத்தில் கொஞ்சம் நெய் சேர்த்து, இந்த பொடியை தூவி சாப்பிட நீங்கள் சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள். இதேபோல் இதனை சப்பாத்திக்கும் பயன்படுத்தலாம்.

அப்புறம் என்ன இந்த சத்தான சுவையான எளிமையான பூண்டு பொடியை உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: How to make poondu podi health benefits of garlic

Next Story
மேக்கப்-க்கு ”நோ” சொல்லுங்க… பளபளப்பான சருமத்திற்கு இந்த 5 விஷயங்கள் தான் முக்கியம்!Skin care tips in tamil: Secret Super foods for glowing skin in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express