Idli recipes tamil: தென்னிந்திய உணவுகளில் ஆரோக்கியமான மற்றும் பிரபலமான காலை உணவாக இட்லி உள்ளது. இந்த அற்புதமான இட்லிக்கு சாம்பார் சட்னிகள் அருமையாக இருக்கும். எனினும், மிருதுவான இட்லிதான் இவற்றுக்கு பொருத்தமாக இருக்கும். இப்படி இட்லி மிருதுவானாக இருக்க நாம் இட்லி தயார் செய்ய பயன்படுத்தும் மாவு அதிகம் புளிக்கமால் இருக்க வேண்டும்.
மிருதுவான இட்லிக்கு சிம்பிள் டிப்ஸ்

இட்லி பஞ்சு போன்று பூப்போல மென்மை யாக இருக்க, இட்லிக்கு அரிசி – உளுந்து ஊறவைக்கும்போது ஒரு தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்து ஊற வைக்கவும்.
நீங்கள் இட்லிக்கு தயார் செய்த மாவில் இட்லி சரியாக வரவில்லை என்றால், கொள்ளு ஊற வைத்து அரைத்து அந்த மாவுடன் சேர்த்து மிக்ஸ் செய்து ஊற்றினால் புசுபுசுவென இட்லி வரும்.
நாம் வெளியூர் பயணம் செல்லும்போது இட்லி எடுத்துச்சென்றால், அதன்மீது தண்ணீர் தெளித்து மிளகாய் பொடி சேர்த்தால், இட்லி செம்ம டேஸ்டியாக இருக்கும்.

குக்கர் இட்லித் தட்டில் எண்ணெய் தடவாமல் இருக்க வேண்டுமானால், இட்லி ஊற்றும் தட்டை நன்கு கழுவி இட்லி ஊற்றவும். இட்லி நன்கு வெந்த பிறகு தட்டின் மீது தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்களுக்கு பிறகு எடுத்தால், இட்லி அற்புதமாக வரும்.
ஒருவேளை நாம் தயார் செய்த இட்லி மாவு புளித்து விட்டால், 2 அல்லது 3 டம்பளர் தண்ணீர் சேர்க்கவும். சில நிமிடம் காத்திருந்தால் தண்ணீர் தெளிந்து மேலே வரும், அவற்றை வடித்த பிறகு மாவு எடுத்தால் அவை நன்றாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“