Immunity Booster Chutney tamil news, health recipe: சுவையான மற்றும் பிரபலமான சைட் டிஷ்ஷாக இருப்பதோடு, சட்னி ஒருவரின் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட. பல்வேறு வகையான சட்னிகள் தயாரிக்க முடியும் என்பதால், அதில் ஊட்டச்சத்துக்களை சேர்த்து ஆரோக்கியமாக சாப்பிடுவது இன்னும் நல்லது. ’நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ, அதான் நீங்கள்’ என்பது போல ஊட்டச்சத்துக்கள் சேரும் மொத்த இடமாக சட்னியை சொல்லலாம்.
தமிழ் சீரியல்களில் கலக்கும் வில்லிகள்: புகைப்படத் தொகுப்பு
ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீட் பாத்ரா, சமீபத்தில் ஒரு சுவையான தக்காளி பூண்டு சட்னியைப் பற்றி பேசியிருந்தார். அதன் செய்முறையை இங்கே குறிப்பிடுகிறோம்.
தேவையானப் பொருட்கள்
1 - தக்காளி
4 - பூண்டு பற்கள்
1 - பச்சை மிளகாய்
1/2 தேக்கரண்டி - எண்ணெய்
ஒரு சிட்டிகை - உப்பு
ஒரு சிட்டிகை - சர்க்கரை
செய்முறை
ஆக்டிவாக இருப்பவர்களுக்கு புதிய தயாரிப்பாளர் சங்கம்
ஒரு வாணலியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு வதக்கவும்.
பின்னர் அவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.
இறுதியாக உப்பு சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரை சேர்த்தால் அந்த சுவை சற்று வித்தியாசமாக இருக்கும்.
தக்காளி, வைட்டமின்கள் மற்றும் குளுடாதியோனை தருகிறது. அதோடு புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.
ப்ரீ பயாடிக், ஆன்டி ஃபங்கல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மை பூண்டுக்கு உண்டு. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது பெரிதும் உதவுகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”