இம்யூனிட்டி அள்ளித் தரும் ஜுஸ் வகைகள்… ஈஸி ஸ்டெப்ஸ் இது தான்…!

How to Make Immunity Booster Juice in tamil: உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித் தரும் ஜுஸ் வகைகள் பற்றியும், அவற்றுக்கான ஈஸி ஸ்டெப்ஸ்களை இங்கு பார்க்கலாம்.

 Immunity Booster Juice Recipe Tamil News: How to Make Immunity Booster Juice in tamil

Immunity-Boosting Foods in tamil: இந்தியா முழுவதும் நிலவி இந்த அசாதார சூழலில் இருந்து நம்மையும், நம்முடைய சுற்றத்தாரையும் பாதுகாத்து கொள்வது அவசியமான ஒன்றாக உள்ளது. எனவே இந்த தருணத்தில் உங்களையும், உங்கள் உடலையும் புத்துணர்ச்சியூட்டும் பானங்களை சேர்த்துக் கொள்வது சரியான தேர்வாகும். அப்படி நாம் தேர்வு செய்பவை உடலுக்கு புத்துணர்ச்சி தருவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஒன்றாக இருந்தால் மிகவும் நல்லது.

அந்த வகையில் உடலுக்கு பல வழிகளில் நன்மைகளை அள்ளித் தரும் பழச்சாறுகளை ஈஸியான முறையில் எப்படி தயார் செய்யலாம் என்றும், அவற்றுக்கு எந்த வகையான பழங்களை எடுத்துக்கொள்ளலாம் என்றும் இங்கு பார்ப்போம்.

புத்துணர்ச்சியூட்டும் சாறு வகையில் பீட்ரூட், கேரட் மற்றும் ஆப்பிள் போன்றவை ஒரு அற்புதமான ஜூஸ் ரெசிபியாக உள்ளன. இவற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கையில் இவை புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பானமாகவும் மாறுகின்றது.

ஜூஸ் செய்யத் தேவையான முக்கிய பொருட்கள்

பீட்ரூட், கேரட், ஆப்பிள், எலுமிச்சை, ஐஸ் க்யூப்ஸ் (விரும்பினால்), உப்பு (விரும்பினால், சுவைக்கு ஏற்ப)

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜூஸ் செய்வது எப்படி?

முதலில் பீட்ரூட், கேரட் மற்றும் ஆப்பிள் ஆகியவற்றை வெட்டி, ஜூஸரில் சாறாக பிழியவும்.

பிறகு நன்கு கலக்கி, வடிகட்டியால் வடிகட்டவும்.

இப்போது, அவற்றோடு அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து பருகி வரவும்.

பின் குறிப்பு

ஒரு வேளை அதிக குளிர்ச்சி விரும்புவராக இருந்தால் சிறிதளவு ஐஸ் க்யூப்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Immunity booster juice recipe tamil news how to make immunity booster juice in tamil

Next Story
அக்கி, முடி உதிர்தல், நகம் பிரச்னைகள்: கோவிட்டுக்கு பிந்தைய தோல் பிரச்னைகளை எச்சரிக்கும் மருத்துவர்கள்Doctors caution about post-Covid dermatological problems Herpes, அக்கி, முடி உதிர்தல், நகம் பிரச்னைகள், கோவிட்டுக்கு பிந்தைய தோல் பிரச்னைகளை எச்சரிக்கும் மருத்துவர்கள், hair fall, nail issues, covid 19, coronavirus
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com