நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 டயட் டிப்ஸ்…!

5 Diet Tips For Boosting Immunity in tamil: உடலுக்கு வலு தருவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 டயட் டிப்ஸ்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

Immunity-Boosters Tamil News: 5 Diet Tips For Boosting Immunity in tamil

Immunity-Boosters Tamil News: நம்முடைய உணவுகள் உடலுக்கு உள்ளார்ந்த மருத்துவ மற்றும் குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளன. எனவே தான் அவற்றை ‘உணவுவே மருந்து’ என்ற பழமொழியோடு அழைக்கிறோம். வைரஸ்கள் மற்றும் நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க சிறந்த மருந்து நீங்கள் உண்ணும் உணவு தான் என்பதை நாம் கவனத்தில் கொள்வது அவசியமான ஒன்றாகும்.

தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலில் நாம் எந்த வகை உணவுகளை தெரிவு செய்து உண்கிறோம் என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் நாம் உண்ணும் உணவுகள் மற்றும் அருந்தும் பானங்கள் நமது உடலுக்கு ஊக்கமளிப்பதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாக இருக்க வேண்டியது இன்றியமையாதது.

உடலுக்கு வலு தருவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 டயட் டிப்ஸ்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

1) பழங்கள் மற்றும் காய்கறிகள் உணவில் ஒரு முழுமையான அவசியம் ஆகும். அவை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஊக்கமளிக்கும் மற்றும் நோய்களைத் தடுக்க உதவும். மேலும் அனைத்து வகை அத்தியாவசிய வைட்டமின்களும் அவற்றில் உள்ளன.

2) கேரட், கீரை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற உணவுகளில் நுண்ணுயிர் பெருக்கம் அல்லது உடலில் புதிய செல்கள் விரைவாக வளர உதவும் நல்ல சேர்மங்கள் உள்ளன. இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தின் முக்கிய அங்கமாகும். எனவே இந்த உணவுகள் உடலுக்கு முக்கியமானதாக உள்ளன.

3) வைட்டமின் சி நிறைந்த உணவுகளும் நோயெதிர்ப்பு மண்டலத்தை செயல்பாட்டுடன் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்ற தேடலில் மிகவும் பயனளிக்கின்றன. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் வீக்கத்திற்கு உதவுவதோடு உடலில் தொற்றுநோய்கள் வராமல் தடுக்கவும் உதவும்.

4) நல்ல நோய் எதிர்ப்பு சக்திக்கான மற்றொரு முக்கிய கூறு ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஆகும். இந்த நல்ல கொழுப்புகள் சில பருப்பு வகைகள் மற்றும் ஆளி அல்லது சியா விதைகள் போன்ற விதைகளில் காணப்படுகின்றன. அவை ஒரு நல்ல ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க உதவுகின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

5) கடைசியாக, புரோபயாடிக்குகள் மற்றும் புளித்த உணவு ஆகியவை நல்ல பாக்டீரியாக்களால் ஏற்றப்படுகின்றன. அவை ஆரோக்கியமான குடலை பராமரிக்க உதவுகின்றன. குடல் என்பது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தில் 70% தங்க வைத்துள்ளது. அதனால்தான் தயிர் அல்லது கொம்புச்சா போன்ற புரோபயாடிக்குகள் உணவில் ஒரு அற்புதமான கூடுதலாக இருக்கும்.

இந்த குறிப்புகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், எலும்பு ஆரோக்கியம், ஆரோக்கியமான மூட்டுகள் மற்றும் ஒளிரும் சருமத்தை பராமரிக்கவும் உதவும். ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் உங்கள் செரிமான ஆரோக்கியத்தில் ஒரு வித்தியாசத்தை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள்.

இருப்பினும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த உணவுகளை அதிகப்படியாக சேர்த்துக்கொள்ள வேண்டாம் என பறித்துரைக்கப்படுகிறது. உங்கள் உணவு அட்டவணையில் ஏதேனும் பெரிய மாற்றங்களைச் செய்வதற்கு முன் எப்போதும் ஒரு சீரான உணவை உட்கொள்தல் நல்லது ஆகும். இதற்கு மேல் ஏதேனும் சந்தேகம் இருப்பின் உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகவும்.

பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருங்கள்!!!

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Immunity boosters tamil news 5 diet tips for boosting immunity in tamil

Next Story
‘பீரோ போன்ற ஃப்ரிட்ஜ்’.. அப்படி என்னதான் இருக்கிறது பிக் பாஸ் அர்ச்சனா ஃப்ரிட்ஜ் டூர் காணொளியில்?Bigg Boss Archana Youtube Channel Fridge Tour Video Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com