Immunity boosting drink in tamil: இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை உருவாகியுள்ள நிலையில், அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது தலையாகிய கடமையாக உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வது, கொடிய வைரஸில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும்.
அந்த வகையில் நம்முடைய உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும், இலவங்கப்பட்டை மற்றும் தேன் போன்ற உணவு பொருட்களை நாம் தேடி அலைய வேண்டியதில்லை. இவை நம்முடைய வீடுகளில் எளிதில் தேடி பிடிக்கும் பொருட்களாக உள்ளன. இவற்றால் அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதோடு, நம்மை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்.
இந்த இலவங்கப்பட்டை மற்றும் தேன் கலந்த தேநீர் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகின்றன. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், குளிர் மற்றும் காய்ச்சலுடன் போராடவும் உதவுகின்றன.
இலவங்கப்பட்டை மற்றும் தேன் கலந்த தேநீர் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
இந்த ஆரோக்கியமான தேநீர் தயாரிக்க உங்களுக்கு சில எளிய பொருட்கள் தேவை. அவற்றில் உங்களுக்கு தேவைப்படுபவன
1/4 டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள்,
1 டீஸ்பூன் தேன்
1 கப் தண்ணீர்.
நீங்கள் செய்ய வேண்டியவை
1 கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து நன்கு கலக்கவும். தண்ணீர் 2-3 நிமிடங்கள் நன்கு கொதித்த பிறகு, அவற்றை ஒரு கப்பில் ஊற்றி சிறிதளவு தேன் கலந்து பருகவும்.
இந்த தேநீர் நல்ல ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும்உதவுவதால், இவற்றை நீங்கள் தினமும் அருந்தி வரலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)