இம்யூனிட்டி… கர்ப்பிணி பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்!
Healthy foods; 5 Essential Foods For Pregnant Women To Boost Immunity in tamil: உங்கள் உணவில் இஞ்சியைச் சேர்ப்பது உங்கள் செரிமானத்தை அதிகரிக்கும் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளிலிருந்து விடுபடவும் உதவும்.
immunity boosting foods in tamil: குளிர்காலத்தில் உள்ள நாம் பகலில் கூட குளிர்ச்சியை உணர்கிறோம். நீங்கள் கர்ப்பமாகிய அல்லது ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணாக இருந்தால், இந்த குளிர்ச்சியானது சளி மற்றும் காய்ச்சல், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று போன்ற பொதுவான நோய்களுக்கு ஆளாக்கும். சில சந்தர்ப்பங்களில், கர்ப்பிணிப் பெண்களும் தங்கள் தோலில் தீவிர வறட்சியை ஏற்படுத்தும்.
Advertisment
இது குறைவான நீரேற்றம் மற்றும் பருவகால மாற்றங்கள் காரணமாக, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி எளிதில் சமரசம் செய்யப்படலாம். எனவே, அவர்கள் தங்கள் உணவில் சேர்க்க வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை இங்கு பட்டியலிட்டுள்ளோம். அவற்றை இப்போது ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.
பூண்டு
பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் 9 மாத அனுபவத்தின் போது வாயு மற்றும் வீக்கத்தை அனுபவிக்கின்றனர். இப்போது, பூண்டு ஏன் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்? இந்த மூலப்பொருள் கந்தக உள்ளடக்கம் மிகுந்தவையாக உள்ளன. இது வாயுவை நீக்குவது மட்டுமல்லாமல், உடலுக்கு வெப்பத்தையும் வழங்குகிறது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது ஒரு சிறந்த தேர்வாகும்.
இஞ்சி
அழற்சி எதிர்ப்பு பண்புகள் மிகுந்து காணப்படும் பொருளாக இஞ்சி உள்ளது. இது காலை நோய் மற்றும் குமட்டலை சமாளிக்க உதவுகிறது. உங்கள் உணவில் இஞ்சியைச் சேர்ப்பது உங்கள் செரிமானத்தை அதிகரிக்கும். இது வயிற்றுப் பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவும். அதுமட்டுமின்றி, இஞ்சி உடலையும் சூடாக வைத்திருக்கும். எனவே, இது உங்கள் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய ஒரு சக்திவாய்ந்த மூலப்பொருள் ஆகும்.
மஞ்சள்
மஞ்சளில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் செப்டிக் பண்புகள் உள்ளன என்பது பல ஆண்டுகளாக அறியப்படுகிறது. இது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் குளிர்காலத்தில் மஞ்சள் பால் குடிப்பது கர்ப்பிணிப் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மேலும், இது குளிர்காலத்தில் உயிர்காப்பாற்றுவது போன்றது. கர்ப்ப காலத்தில் பயங்கரமான சளி மற்றும் இருமலில் இருந்து விடுபடவும் இது உதவுகிறது.
நெல்லிக்காய்
இந்த அற்புத பழம் ஒரு இயற்கை நச்சு நீக்கியாகவும், வைட்டமின் சி அதிக அளவில் காணப்படும் ஒரு பழமாகவும் உள்ளது. குழந்தையை எதிர்பார்க்த்து இருக்கும் பெண்களுக்கு, இரும்புச்சத்து ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். மேலும் இந்த பழத்தை உங்கள் உணவில் சேர்க்கும் போது, இது இரும்புச்சத்தை மிக எளிதாக உறிஞ்ச உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி வகையால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை எந்த மூலப்பொருளாலும் அதிகரிக்க முடியாது.
பசும் பால்
குளிர்காலத்தில் ஒரு கிளாஸ் பசும்பால் குடிப்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். லாக்டோஃபெரின் என்று பெயரிடப்பட்ட இந்த திரவம் வைரஸ் மற்றும் உடல் செல்கள் இடையேயான தொடர்புகளை குறுக்கிடுகிறது. மேலும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஒன்றாகவும் உள்ளது. உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதனுடன் மஞ்சளையும் சேர்த்துகொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“