immunity boosting foods in tamil: நோயை குணப்படுத்துவதை விட தடுப்பது எப்போதும் சிறந்த ஒன்றாகும். இந்த கொரோனா தொற்று பரவல் தருணத்தில் முகக்கவம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற அடிப்படையான செயல்களை கடைபிடிப்பது மிகவும் நல்லதாகும். மேலும், ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி வழக்கத்தை பின்பற்றுவதன் மூலம் தொற்றுநோய் நமக்கு பரவதை தடுக்கலாம்.
எனவே, நமது உடலுக்கு ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பது மூலம் தொற்றுநோயை எதிர்த்துப் போராடலாம். நமது நோயெதிர்ப்பு சக்தி அடிப்படையில் டி-செல்கள் வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன மற்றும் நமக்குப் பாதுகாப்பை வழங்குகின்றன. மேலும், ஓமிக்ரான் போன்ற திரிபுற்ற கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதிலும் அவற்றின் பங்கு ஆன்டிபாடிகளை விட மிகவும் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த, உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டில் சமைத்த உணவுகள், நார்ச்சத்து நிறைந்த வைட்டமின் சி நிறைந்த உணவுகள், பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
அந்த வகையில் நமது உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தி தரும் மற்றும் ஓமிக்ரான் போன்ற தொற்று நோயை எதிர்த்துப் போராட உதவும் உணவுகளை, உணவியல் நிபுணர் 'ருச்சி பர்மர்' இங்கு பரிந்துரை செய்துள்ளார். அவற்றை இப்போது ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.
நெய்
எளிதில் ஜீரணிக்கக்கூடிய கொழுப்பு உணவுகளில் இதுவும் ஒன்றாகும். இது உடலில் வெப்பத்தை உருவாக்கி உங்களை சூடாக வைத்திருக்க உதவுகிறது. இவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்ப்பது மிகச் சிறந்ததாகும்.
ஆம்லா அல்லது நெல்லிக்காய்
இது வைட்டமின் சி நிறைந்த பருவகால உணவு மற்றும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவும் முக்கிய ஆதாரமாகும். எனவே இந்த தொற்று பரவும் சூழலில் நெல்லிக்காய் சாற்றை தொடர்ந்து சாப்பிடுவதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
தினை
நார்ச்சத்து அதிகம் உள்ள தினைகளில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் இருப்பதால், அவை நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த உணவாக அமைகிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமின்றி உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
இந்த குளிர்காலத்தில், ராகி போன்ற தினைகளைச் சேர்ப்பது மிகவும் நல்லது. அவை அதிக நார்ச்சத்து கொண்டவை, உங்கள் செரிமான அமைப்புக்கு நல்லது மற்றும் உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.
இஞ்சி
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிரம்பி காணப்படுகிறது. இது தொண்டை வலியை குணப்படுத்த உதவுகிறது. கிருமிகள், பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இவற்றை தினமும் தேநீரில் சேர்ப்பது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்கும்.
மஞ்சள்
இவை ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது அனைத்து இருமல் பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. 1 டீஸ்பூன் மஞ்சளை எடுத்து, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருதல் நமது உடலுக்கு கூடுதல் நன்மை பயக்கும்.
தேன்
இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் மற்றும் செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும், இது தொண்டை வலிக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஓமிக்ரானுடன் போராட உங்கள் இஞ்சி மற்றும் தேன் கலந்த தேநீர் பருகுவது மிகவும் நன்மை பயக்கும்.
உங்கள் தினசரி உணவில் சர்க்கரையை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள், ஏனெனில் இது உங்கள் எடையை அதிகரிக்கும் மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் இது குறைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.