Immunity-Boosting Foods Tamil News: இந்தியாவில் தற்போது அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. நாடு முழுதும் பரவிய கொரோனா தொற்றின் முதல் அலை ஓய்வதற்குள் அதன் 2ம் அலை உருவாகியுள்ளது. இதன் தாக்கமோ முதல் அலையை விட மிகக் கொடுமையானதாக உள்ளது. இந்த கொடிய பெருந்தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க மத்திய - மாநில அரசுகள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இருப்பினும், இது போன்ற பெருந்தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க நம்முடை அன்றாட உணவுகளில் கவனம் செலுத்துவது அவசியமான ஒன்றாகும். அதுவும் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் அதீத கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகிறார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகளை தேடி அலைவதில் நம்மில் பெரும்பாலோனோர் கண்டிப்பாக சிரமத்திற்கு உள்ளாவோம். இந்த உணவு பொருட்களை தேடி கடைக்கு கடை அலைய வேண்டியதில்லை. இவற்றை நம்முடைய வீடுகளிலேயே ஈசியாக தேடி எடுத்து விடலாம். அவை என்னென்ன உணவு பொருட்கள் என்று இங்கு பார்க்கலாமா!
கருப்பு மிளகு
கருப்பு மிளகு என்று அழைக்கப்படும் மிளகு, இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பண்புகளை கொண்டுள்ளது. இதில் இயற்கையாகவே வைட்டமின் சி சத்துக்கள் நிரம்பியுள்ளன. மேலும் பாக்டீரியா மற்றும் நச்சு பொருட்களை உடலில் தேங்க விடாமல் அடித்து விரட்டுகிறது.
பூண்டு
இருமல் மற்றும் குளிரீல் இருந்து பாதுகாக்கும் தன்மையை பூண்டு கொண்டுள்ளதால், இது ஒரு நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. மேலும் இவை நோயெதிர்ப்பு அமைப்பு கிருமிகளுடன் போராட உதவும் கலவைகளையும் கொண்டுள்ளது.
இஞ்சி
இஞ்சி, தொண்டையில் ஏற்படும் காயத்தை ஆற்றுப்படுத்துவத்தோடு மார்பு நெரிசலையும் நீக்குகிறது. இது நம்முடைய உடலில் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிகவும் தேவையான உந்துதலையும் தருகிறது.
எலுமிச்சை
ஜலதோஷத்தைத் தவிர்ப்பதில் அதிசயங்களைச் செய்கிறது எலுமிச்சை. இது அடிப்படையில் பூஞ்சை காளான் மற்றும் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. எலுமிச்சையில் இயற்கையாக நிகழும் வைட்டமின் சி உள்ளடக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக வைத்திருக்க உதவுகிறது.
மஞ்சள்
இந்த எளிய மசாலா பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. மேலும் நோயை உருவாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸுக்கு எதிராக உடலின் இயற்கையான பாதுகாப்பை உருவாக்க உதவுகிறது.
தேன்
தேனில் உள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் மகரந்தம், ஆண்டிசெப்டிக் மற்றும் பருவகால ஒவ்வாமைகளை நீக்குகிறது.
இந்த உணவுகளைத் தவிர, நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் சில குறிப்புகளையும் இங்கு வழங்கியுள்ளோம்.
தினசரி உடற்பயிற்சி.
உங்கள் எடை மற்றும் இரத்த சர்க்கரையை கண்காணிப்பு.
உங்கள் உணவில் போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்வது .
சீரான உணவை அன்றாட சேர்த்துக்கொள்வது.
8 மணிநேர கண்டிப்பாக தூங்குவது போன்றவை ஆகும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.