10 நிமிடத்தில் புளி, பூண்டு ரசம்: இம்யூனிட்டிக்கு எப்பவும் இது பெஸ்ட்!

Rasam for covid and fungus Tamil News: கொரோனாவை அடித்து விரட்டும் சக்தி கொண்ட சுவையான ரசம் செய்யும் ஈஸியான செய்முறை குறித்து இங்கு காணலாம்.

Immunity boosting foods Tamil News: Rasam with Tamarind and Garlic in tamil

Immune boosting drinks Tamil News: கொரோனா வைரஸ் தொற்றுநோயின் 2வது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், நம்மையும் நம் குடும்பத்தினரையும் பாதுகாப்பது இன்றியமையாத ஒன்றாகும். எனவே இந்த இக்கட்டான காலத்தில் மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குணங்களுடன் உள்ள ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும்.

அந்த வகையில் நமது சமையலறையில் எளிதில் கிடைக்கக்கூடிய மசாலாப் பொருட்களான பூண்டு, புளி, கறிவேப்பிலை போன்றவற்றால் தயாரிக்கப்படும் ரசத்தை அன்றாட நமது உணவுகளில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும். கொரோனாவை அடித்து விரட்டும் சக்தி கொண்ட இந்த சுவையான ரசம் செய்யும் ஈஸியான செய்முறை குறித்து இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்

புளி – 1 டேபிள் ஸ்பூன்

தக்காளி – 1 (நறுக்கியது)

கறிவேப்பிலை – 10-12

கருப்பு மிளகு – 1-2 தேக்கரண்டி

பூண்டு – 4-5

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

உலர் சிவப்பு மிளகாய் – 2

உப்பு – சுவைக்க

சீரகம் – 1 டீஸ்பூன்

அசாஃபோடிடா (பெருங்காயம்) – அரை டீஸ்பூன்

கொத்தமல்லி இலைகள் – 1 தேக்கரண்டி (புதிதாக நறுக்கியது)

எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு விதைகள் – 1 டீஸ்பூன்

செய்முறை

உலர்ந்த வறுத்த 2 சிவப்பு மிளகாய், கருப்பு மிளகு, சீரகம், பூண்டு மற்றும் 4-5 கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து ஒரு கலவையாக அரைக்கவும்.

பிறகு ஒரு பாத்திரம் எடுத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நறுக்கிய தக்காளி, மீதமுள்ள கறிவேப்பிலை, மஞ்சள், சிறிதளவு உப்பு சேர்த்து 3-4 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

பின்னர், புளியுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்கு இளங்கொதிவாக்கவும்.

மற்றொரு கடாயில், சிறிது எண்ணெய் (அல்லது நெய்) சேர்க்கவும். எண்ணெய் சூடேறிய பிறகு, கடுகு, 1 சிவப்பு மிளகாய் போன்றவற்றை சேர்க்கவும். பிறகு கடாயில் முன்பு அரைத்த வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும். இப்போது, அடுப்பை அணைத்து, புதிதாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். சிறிது கருப்பு மிளகு தூள் தெளிக்கவும்.

இந்த ரசத்தை எப்போது வேண்டுமானாலும் சுட வைத்து பருகி வரலாம். அதோடு உங்கள் உணவுகளுடனும் சேர்த்துக்கொள்ளலாம்.

ரசத்தின் நன்மைகள்

ரசம் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குணங்களுக்கு பெயர் பெற்றவை. புளி, மஞ்சள் மற்றும் கறிவேப்பிலை பூஞ்சை எதிர்ப்பு குணங்களுடன் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. பூண்டைப் பொறுத்தவரை, நோயெதிர்ப்பு மண்டலத்திற்கான அதன் நன்மைகள் உலகளவில் அறியப்பட்டவை. இது ஜலதோஷம் உள்ளிட்ட நோய்களை எதிர்த்து நிற்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Immunity boosting foods tamil news rasam with tamarind and garlic in tamil

Next Story
வெதுவெதுப்பான தண்ணீருடன் வெல்லம்… இவ்வளவு பலன் இருக்கு!jaggery lemon hot water, jaggery hot water benefits, jaggery lemon hot water benefits, வெல்லம், எலுமிச்சை, வெல்லம் சூடான தண்ணீர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெல்லம் தண்ணீர், jaggery lemon hot water for boosting immunity, immunity boosting, covid pandemic, healthy drinks, healthy foods, healthy food tips
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com