உஷார்… இந்த உணவுகளைத் தொட்டால் உங்க இம்யூனிட்டி அவுட்!

Top 5 foods that can cause damage to your immune system Tamil News: சர்க்கரை கலந்த பண்டங்களை அதிகமாக உட்கொள்வது நோயெதிர்ப்பு அமைப்பை காலப்போக்கில் பலவீனமடையச் செய்யும்.

Tamil Health Immunity damaging foods tamil: உடல் ஆரோககியத்திற்கு சத்தான உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்யது அவசியம். நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. மரபியல், சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு காரணிகளும் இதைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருந்தாலும், ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு நோய் எதிர்ப்பு சக்தியில் நேரடி தாக்கங்களை ஏற்படுத்தும். சில உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் போது, ​​பல்வேறு உணவுகள் மற்றும் பானங்கள் தொற்று மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடும் உடலின் திறனுக்கு கணிசமான தீங்கு விளைவிக்கும்.

அந்த வகைகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் மற்றும் பானங்களை இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் உணவுகள் மற்றும் பானங்களை பின்வருமாறு:-

துரித உணவு அல்லது ஃபாஸ்ட் ஃபுட் (Fast food):

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவின் மூலம் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை அடைய முடியும். சமச்சீரான உணவு நல்ல டயட்க்கு உதவும்.

ஆனால், பிட்சா, பர்கர், ஃபிரைஸ் போன்ற துரித உணவுகளை நாம் எடுத்துக்கொள்வதால் நாம் உடல் அதிக பாதிப்பையே எதிர்கொள்ளும். மேலும் இந்த உணவுகளில் அதிக கலோரிகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்து உள்ளடக்கம் குறைவாக இருப்பதால் அவை உடல் ஆரோக்கியத்தை சேதப்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் பலவீனப்படுத்துகிறது.

மது (Alcohol):

நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் பானங்களில் மது முக்கிய இடத்தை பெறுகிறது. இது கல்லீரலை சேதப்படுத்துவது, அறிவாற்றல் செயல்பாட்டைக் குறைப்பது மற்றும் மோட்டார் திறன்களை மோசமாகப் பாதிப்பது என உடலுக்கு ஊறு விளைவிக்கிறது. மேலும், அதிகப்படியான ஆல்கஹால் நோயெதிர்ப்பு மண்டலத்தை முற்றிலும் பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேன்களில் அடைப்பட்ட உணவுகள் (Canned foods):

தயார் செய்யக்கூடிய உணவுகள், மீன், இறைச்சி, பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற உண்ணக்கூடிய பொருட்கள் பெரும்பாலும் கேன்களில் வருகின்றன. அவை பெரும்பாலும் முறையான பாதுகாப்புகளைப் பயன்படுத்தி சேமிக்கப்படுகின்றன என்பதில் கேள்வியே எழுகிறது. இவற்றில் காணப்படும் அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் பிற சேர்க்கைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை முற்றிலும் பலவீனப்படுத்தும்.

சர்க்கரை சேர்க்கப்பட்ட பண்டங்கள் (Sugary treats):

சாக்லேட்டுகள், மிட்டாய்கள் மற்றும் இனிப்புகள் பெரும்பாலும் பிரபலமான ஆறுதல் உணவுகளாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், இந்த சர்க்கரை கலந்த பண்டங்களை அதிகமாக உட்கொள்வது நோயெதிர்ப்பு அமைப்பு காலப்போக்கில் பலவீனமடையச் செய்யும். இதனால் உடலுக்கு தொற்று மற்றும் நோய்களின் ஆபத்தை ஏற்படுத்தும். மேலும், இது உடல் பருமன், எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு போன்ற நாட்பட்ட நோய்கள் போன்ற நிலைமைகளை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.

சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் (Refined foods) :

பொதுவாக உட்கொள்ளப்படும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளில் வெள்ளை ரொட்டி, பாஸ்தா மற்றும் வெள்ளை மாவு ஆகியவை அடங்கும். இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது குடல் நுண்ணுயிரியில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். முழுமையான ஆரோக்கியத்தை ஒழுங்குபடுத்துவதில் ஒரு ஒருங்கிணைந்த காரணியாக இருப்பதால், ஆரோக்கியமற்ற குடல் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் சேதப்படுத்தும்.

எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் அபாயத்தைத் தணிக்க இந்த உணவு மற்றும் பானங்களை தவிருங்கள். செயற்கை பொருட்களை தவிர்த்து இயற்கை பொருட்களை விரும்பி உட்கொள்ளும்போது உடல் ஆரோக்கியம் மேம்படும்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Immunity damaging foods tamil these foods might be damaging your immunity

Next Story
சுட்டெரிக்கும் சூரியன்… வெயிலில் இருந்து பாதுகாக்க என்ன பண்ணலாம்? டிப்ஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com