Immunity foods: தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த ஆரோக்கிய நெருக்கடி அனைவரையும் எதாவது ஒரு வழியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வைத்துள்ளது. பாரம்பரிய உணவுகளை உண்பது, தவறாமல் உடற்பயிற்சி செய்வது போன்ற எளிமையான வழிகளில் அனைவரும் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த தொடங்கியுள்ளனர். நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய மற்றும் சுவையான இந்த சட்னியை முயற்சித்துப் பார்க்கலாம்.
ஊட்டச்சத்து நிபுணர் Lavleen Kaur நமது கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு செய்முறை குறித்து விளக்கியுள்ளார். சாதம், ரொட்டி, சப்ஜி மற்றும் பருப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பாரம்பரிய சாப்பட்டுடன் இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சட்னியை வீட்டில் உள்ள அனைவரும் சுவைத்து மகிழலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு காலத்தில் குழந்தைகளை சுறுசுறுப்பாக்கும் செயல்கள்...
Immunity foods: தேவையான பொருட்கள்
1 – பச்சை மாங்காய்
3 பல் – பூண்டு
2 துண்டு – இஞ்சி
1/2 – சின்ன வெங்காயம்
1 – சின்ன தக்காளி
1 தேக்கரண்டி – மாதுளம் பழ விதைகள்
10-12 – வாடாத கறிவேப்பிலை
4-5 – வாடாத கற்பூரவல்லி இலை
5-6 – வாடாத இனிப்பு basil இலைகள் (niazbo)
1 கப் – வாடாத புதினா இலைகள்
1 கப் – வாடாத மல்லி இலைகள்
2-3 – பச்சை மிளகாய்
உப்பு (rock salt) – தேவைக்கு ஏற்ப
புளி/ வெல்லம் (விருப்பப்பட்டால்)
செய்முறை
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தேவையான பொருட்களையும் சிறிய உரலில் போட்டு அவை நன்றாக கலந்து ஒரு சட்னி பருவத்துக்கு வரும் வரை இடிக்கவும்.
எப்படி சாப்பிடுவது?
உங்கள் சாப்பாட்டுடன் 1-2 தேக்கரண்டி வரை சேர்த்துக் கொள்ளலாம்.
சேர்க்கப்பட்டுள்ள பொருட்களால் ஏற்படும் நன்மைகள்
பச்சை மாங்காய், தக்காளி மற்றும் மாதுளம் பழ விதைகளில் நிறைய வைட்டமின் சி சத்து உள்ளது.
இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளியில் antioxidants, அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் உள்ளன.
வாடாத இலைகள் நல்ல செரிமானத்துக்கு உதவும்.
இனிப்பு basil இலைகள் குமட்டலை போக்க உதவும்.
ரோஜா, பால், தேன்... இதழுக்கு மெருகூட்டும் இனிய காம்பினேஷன்!
யாரெல்லாம் இதை உண்ணலாம்?
நீரிழிவு நோய் மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிக்க இது சிறந்தது.
அமிலத்தன்மையையில்(acidity) இருந்து நிவாரணத்துக்கு நல்லது. (உட்பொருட்களில் இருந்து பச்சை மிளகை நீக்கி விடவும்)
அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை நீக்குகிறது.
வைட்டமின் சி இருப்பதால் இரத்த சோகைக்கு நல்லது
PCOD, தைராய்டு மற்றும் சமநிலையற்ற ஹார்மோன் பிரச்சனைகளுக்கும் சிறந்தது.
எனினும் உங்களுக்கு IBS அல்லது Irritable Bowel Syndrome இருந்தால் அல்லது நீங்கள் கருவுற்றிருந்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.