உங்களைப் பற்றியே அதிகம் சிந்திக்கிறீர்களா? அப்படியெனில் இந்த டிப்ஸ் உங்களுக்குத் தான்

ஏதாவது ஒரு நாளில் உங்களது பழக்கவழக்கத்தைப் பற்றி நாள்குறிப்பில் எழுதிவையுங்கள்

ஏதாவது ஒரு நாளில் உங்களது பழக்கவழக்கத்தைப் பற்றி நாள்குறிப்பில் எழுதிவையுங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Introvert

Introvert

வெளியில் சென்று வாருங்கள்

கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்..

Advertisment

எப்போதாவது டேட்டிங் போவதற்கோ அறிமுகமில்லாதவர்களைச் சந்திப்பதற்கோ நீங்கள் விரும்பவில்லை என்றால் சரி. ஆனால் ஒரு காலை நகர்வலமோ அருகிலுள்ள பூங்காவில் ஒரு மாலை நேர நடையோ அல்லது உங்களுக்குப் பிடித்தமான ஒரு புத்தகத்தை காஃபி பருகிக்கொண்டே படிப்பதோ எப்படியாகவோ நீங்கள் வெளியில் சென்றுவந்தாக வேண்டும். இது மற்றவர்களுடன் உங்களைக் கலக்கவைக்கும்; அதற்காக அவர்களுடன் பின்னிப்பிணைய வேண்டும் என்பதில்லை. சங்கதி என்னவென்றால் உள்ளுக்குள்ளேயே இருந்துகொண்டிருப்பது சமூகத்திலிருந்து உங்களைத் தனிமைப்படுத்திவிடும். அடுத்த முறை யாருடனாவது பேசவேண்டும் என்றால், தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும்.

தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!

19ம் தேதி துவங்கும் கிரேட் இந்தியன் சேல்! இந்த முறை என்ன வாங்க ப்ளான்?

இனிமையான வேலைச்சூழல்

தன்மையமான ஒரு பணியாளரின் பலம் என்பது வேலையைத் தொடங்கிவிட்டால் போதும், அப்படியே அதில் மூழ்கிவிடுவார்கள். ஆனாலும் ஒரு குழுக் கூட்டத்தில் நீங்கள் பங்களிக்காவிட்டாலோ புதிய கருத்துருகளைச் சொல்லாவிட்டாலோ குழுத்தன்மைக்கு அது சிறிதுகாலத்துக்கு மேல் சரிவராது. ஆகையால், வேலைநேரத்தின்போது உரையாடுவது என்பது நல்லதொரு எண்ணமாகவே இருக்கும்.

சுய முன்முடிவுகளை நிறுத்துங்கள்

மகிழ்ச்சிக்கான முதல் படி என்னவெனில் உங்களை நீங்களே நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொள்வதுதான். உங்களை முழுமையாக மாற்றிக்கொள்வதற்கு வலிந்து முயற்சிசெய்வீர்களேயானால் அது உங்களின் மன அமைதியையே குலைக்கும். ஆகையால், ஏதாவது ஒரு நாளில் உங்களது பழக்கவழக்கத்தைப் பற்றி நாள்குறிப்பில் எழுதிவையுங்கள்; அதில் ஏற்படும் படிப்படியான மாற்றங்கள் தன்மையளவில் மாறுவதை உங்களால் பார்க்கமுடியும்.

Advertisment
Advertisements

நல்ல மனிதர்கள் எப்போதும் சூழ்ந்திருக்கட்டும்

அவர்கள் உங்கள் அணுக்க நண்பர்களாக இருக்கலாம், பெற்றோராக இருக்கலாம், சகோதரர்களாக இருக்கலாம். நேர்மையான பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் யாரும் உங்களைப் பற்றி முன்முடிவாக இருக்கமாட்டார்கள். உங்களோடு திறந்தமனதோடு யார் பேசுவார்களோ அப்படிப்பட்டவர்களைக் கண்டறிந்து உங்களின் பலம், பலவீனம் குறித்து அறிந்துகொள்ளுங்கள்.

பயங்கரவாதிகள் கைதுக்கு பழிவாங்க கொல்லப்பட்டாரா எஸ்.ஐ வில்சன் ?

நீங்களே உங்கள் விருந்தாளி

சமைப்பதில் உங்களுக்கு விருப்பார்வம் என்றால் ஒரு நல்ல சமையலைச் செய்து சாப்பிடவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்களே உங்களுக்கான விருந்தினராக மாறிக்கொள்ளுங்கள். ஒரு குவளையில் ஒயின், பின்னணியில் இதமான இசை, சுவையான உணவுடன் மெழுகுவர்த்திகளையும் ஏற்றிவைத்துக்கொண்டால், அது என்ன தீங்காகிவிடுமா என்ன? சரி, இதற்காக ரொம்ப மெனக்கெடவேண்டியிருக்கிறது என்றால் வெளியில்போய் இதே அளவுக்கு மகிழ்வூட்டக்கூடிய ஒரு வகைவகையான உணவைச் சாப்பிட்டுவாருங்கள் அல்லது அதற்கிணையான ஒன்றை வீட்டுக்கு வரவழைத்துக்கொள்ளுங்கள்.

இதை ஆங்கிலத்தில் படிக்க - Are you an introvert? These tips can make your life easier

தமிழில் - இர.இரா.தமிழ்க்கனல்

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: