தயிர், வேர்க்கடலை பேஸ்ட்… வெஜிடபிள் கிரேவியை கெட்டியாக தயார் செய்வது இப்படித்தான்!

Vegetable Gravy without Onion and Garlic simple tips in tamil: உங்கள் வெஜிடபிள் கிரேவியை கெட்டியாக மாற்ற, அரைத்த பாதாமில் செய்யப்பட்ட பேஸ்ட்டைப் பயன்படுத்தலாம். இது சுவையை அப்படியே வைத்திருக்க உதவும்.

Kitchen hacks in tamil: How To Make Vegetable Gravy Without Using Onion and Garlic

Kitchen hacks in tamil: பெரும்பாலான மக்கள் தங்கள் காய்கறி குழம்புகளை (வெஜிடபிள் கிரேவியை) கெட்டியாக மாற்ற பூண்டு மற்றும் வெங்காய விழுதை பயன்படுத்துகின்றனர். இருப்பினும், உண்ணாவிரதத்தின் போதும் அல்லது வேறு சில காரணங்களாளும் பலர் பூண்டு மற்றும் வெங்காயத்தை உட்கொள்ள மாட்டார்கள். எனவே, வெங்காயம் மற்றும் பூண்டு பயன்படுத்தாமல் கெட்டியான வெஜிடபிள் கிரேவிகளை எப்படி செய்வது? என்று பலருக்கும் தெரியாமல் போய்விடுகிறது. 

அப்படி, வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாமல் கெட்டியான மற்றும் சுவையான வெஜிடபிள் கிரேவிகளை தயார் செய்ய இங்கு சில சிம்பிள் டிப்ஸ்களை வழங்கியுள்ளோம். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம். 

வெஜிடபிள் கிரேவியை கெட்டியாக தயார் செய்வது எப்படி?

1. உங்கள் வெஜிடபிள் கிரேவியை கெட்டியாக மாற்ற நீங்கள் தயிரை பயன்படுத்தலாம். இது வெங்காயத்தின் தேவையை நீக்கும். மேலும், கிரேவியை புதியதாகவும் சுவையானதாகவும் மாற்றும். 

2. நீங்கள் தக்காளியில் குழம்பு (கிரேவி) செய்ய விரும்பினால், கடலைப்பருப்பைப் பயன்படுத்தி கெட்டியாக மாற்றலாம். இது கிரேவியின் சுவையை இழக்காமல் கெட்டியாக்கி விடும்.

3. உங்கள் வெஜிடபிள் கிரேவியை கெட்டியாக மாற்ற, அரைத்த பாதாமில் செய்யப்பட்ட பேஸ்ட்டைப் பயன்படுத்தலாம். இது சுவையை அப்படியே வைத்திருக்கும். அதே வேளையில், கிரேவியை டேஸ்டியானதாக மாற்றும். 

4. வெஜிடபிள் கிரேவியை கெட்டியாக்க உணவகங்களில் முந்திரியை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். இது நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்களும் அதுபோல் செய்யலாம். ஆனால், அவற்றை அடிக்கடி செய்வது சாப்பிட்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

5. உங்கள் தக்காளி கிரேவியில் சிறிது மாவு சேர்த்து கெட்டியாகலாம். இருப்பினும், அதை உங்கள் கிரேவியில் சேர்ப்பதற்கு முன் சிறிது வறுத்துக்கொள்ளவும். 

6. வெஜிடபிள் கிரேவியை கெட்டியாக்க வேகவைத்த உருளைக்கிழங்கையும் பயன்படுத்தலாம்.

7. கடலை மாவு பேஸ்ட்யை பயன்படுத்தி வெஜிடபிள் கிரேவியை கெட்டியாக மாற்றலாம். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kitchen hacks in tamil how to make vegetable gravy without using onion and garlic

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com