அடுப்பில் பால், டீ, சாதம் பொங்கி விடாமல் இருக்க வேண்டுமா? செம்ம டிப்ஸ்
Simple tips to stop boiling water or milk from spilling out of the pan in tamil: டீ, பால், சாதம் போன்றவைகளை சமைக்கும் போது அவை பொங்கி வராமல் இருக்க பாத்திரத்தின் மேல் பகுதியில் மரக் கரண்டி வைத்தால் போதும்.
kitchen hacks in tamil:நம்முடைய வீடுகளில் பால் மற்றும் தண்ணீரை கொதிக்க வைக்கும் போது அவை பொங்கி வெளியேறுவது மிகவும் வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இதைத் தவிர்ப்பதற்கு நாம் எவ்வளவு கவனம் செலுத்தினாலும், அவை தோல்வியிலே முடிந்து விடுகிறது. ஆனால், இன்று நாம் பார்க்கவுள்ள இந்த டிப்ஸ் மூலம் அவற்றை எப்படி தவிர்க்கலாம் என்று பார்க்கலாம்.
Advertisment
டீ, பால், சாதம் போன்றவைகளை சமைக்கும் போது அவை பொங்கி வராமல் இருக்க பாத்திரத்தின் மேல் பகுதியில் மரக் கரண்டி அல்லது ஸ்பேட்டூலா ஸ்பூனை வைக்கவும். இப்போது நீங்கள் உங்கள் கண்களைத் திருப்பினாலும், அவை பொங்கி நிரம்பி வழியாது.
ஆனால் இது எப்படி வேலை செய்கிறது?
இது அறிவியலை உள்ளடக்கிய செயல்முறை ஆகும். மரம் அடிப்படையில் ஒரு இன்சுலேட்டர், அதாவது மின் கடத்தா பொருட்கள். இதனால், இவை தண்ணீர் அல்லது திரவ குமிழ்களை எளிதில் குளிர்விக்க உதவுகிறது.
உண்மையில், பாத்திரத்தின் மேல் இவற்றை குறுக்காக வைப்பது பொங்கி நிரம்பி வழிவதை தடுக்க உதவுகிறது.
பொதுவாக, கொதிக்கும் பால் அல்லது தண்ணீருக்கு 100 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது. இந்த தருணத்தில் மரத்தாலான ஸ்பேட்டூலா மட்டுமே அதை விரைவாக குளிர்விக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“