சமைத்த உணவில் எண்ணெய் அதிகமாகிவிட்டதா? அகற்ற சிம்பிள் டெக்னிக்

Tamil Cooking Hacks: How to remove excess oil from dishes in tamil: எண்ணெய் பலகாரங்கள் சமைக்கும் போது புகை சீக்கிரம் வெளியேறும் இடத்தில் சமைக்கவும். இது அவற்றில் அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சப்படுவதைத் தவிர்க்க உதவுகிறது.

Kitchen hacks in tamil: simple steps to Remove Excess Oil From Cooked Food tamil

Kitchen hacks in tamil: நம்முடைய வீடுகளில் எண்ணெய் பலகாரங்கள் அல்லது சில எண்ணெய் நிறைந்த உணவுகள் சமைக்கும் போது அவற்றில் அதிகப்படியான எண்ணெய் இருப்பது வழக்கம். இந்த பலகாரங்கள் மற்றும் உணவுகள் எண்ணெய் அதிகமாக உறிஞ்சாமல் இருக்க பல வழிகளை கடைபிடித்திருப்போம். எனினும், அவை தோல்வியிலே முடிந்திருக்கும்.

ஆனால், இன்று நாம் பார்க்கவுள்ள சில டிப்ஸ்கள் எண்ணெய் அதிகமாக உறிஞ்சாமல் இருப்பதை தடுக்க உதவுவதோடு, நாம் சத்தான உணவை தான் உண்ண உள்ளோம் என்பதை நிரூபிக்கிறது.

சமைத்த கறியிலிருந்து எண்ணெயை எப்படி அகற்றுவது?

நம்முடைய வீடுகளில் சமைத்த கறியிலிருந்து அதிகப்படியான எண்ணெயை அகற்றுவதற்கான எளிதான வழி, அதில் ஒரு பெரிய ஐஸ் க்யூப் வைப்பதாகும்.

அதிகப்படியான எண்ணெய் பனிக்கட்டிக்கு அடியில் சிக்கிக் கொள்கிறது, பின்னர் கொழுப்பின் அடுக்கை எளிதாக அகற்றி கிரேவியில் இருந்து பிரிக்கலாம்.

அதிகப்படியான எண்ணெயை அகற்ற மற்றொரு வழி கறியை குளிர்விக்க அனுமதிப்பது ஆகும். அதை சில மணி நேரம் குளிர வைத்தால், கொழுப்பு மேலே உயர்ந்து கெட்டியாகிவிடும். நீங்கள் ஒரு கரண்டியைப் பயன்படுத்தி கொழுப்பை அகற்றலாம்.

ஃபிரைடு உணவில் இருந்து எண்ணெயை எப்படி அகற்றுவது?

பலகாரங்கள் சமைக்கும் போது புகை சீக்கிரம் வெளியேறும் இடத்தில் சமைக்கவும். இது அவற்றில் அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சப்படுவதைத் தவிர்க்க உதவுகிறது.

மேலும், கடாயில் இருந்து அவற்றை எடுத்து சல்லடை அல்லது எண்ணெய் வடிகட்டும் பாத்திரத்தில் சிறிது நேரம் வைக்கவும். இது அதிகப்படியான எண்ணெயை அகற்ற உதவுகிறது,

தவிர, அவற்றை காகிதங்களில் வைப்பதன் மூலமாகவும் எண்ணெய் அதிகமாக இருப்பதை தவிர்க்கலாம்.

சாஸில் இருந்து எண்ணெய் எப்படி அகற்றலாம்?

வீட்டில் தயாரிக்கப்பட்ட சாஸில் இருந்து அதிகப்படியான எண்ணெயை அகற்ற எளிதான வழி ஒரு மணி நேரம் குளிரூட்டுவதாகும். இப்போது, ​​அதன் மேல் உள்ள எண்ணெய் அடுக்கை அகற்றவும்.

சாஸ் கொதித்ததும் அதை குளிர்விக்க அனுமதிக்கவும் மற்றும் அதிகப்படியான எண்ணெய் மேலே உயரும். நீங்கள் அதை எளிதாக ஸ்கூப் செய்யலாம். இப்போது உங்கள் சாஸ் பயன்படுத்த தயாராக இருக்கும்.

சூப்பில் இருந்து எண்ணெய் எப்படி அகற்றுவது?

வெண்ணெய் மற்றும் எண்ணெய் கலவையானது சூப்பில் அதிகப்படியான கொழுப்பு உள்ளடக்கத்தை ஏற்படுத்துகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் உறிஞ்சக்கூடிய காகிதம் அல்லது சர்வீட் பயன்படுத்தலாம்.

ஒரு லேடில் வடிவத்தை உருவாக்க அதை மடித்து, அதன் மேல் மிதக்கும் அதிகப்படியான எண்ணெயுடன் சிறிது சூடான சூப்பில் தட்டவும். காகிதம் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிவிடும். இப்போது உங்கள் சூப் ருசிக்க தயாராக இருக்கும்.

உலர்ந்த காய்கறிகளிலிருந்து எண்ணெய் எப்படி அகற்றலாம்?

வீட்டு சமையல்காரர்களின் கூற்றுப்படி, காய்கறியின் அளவைப் பொறுத்து சிறிது வறுத்த மாவு சேர்த்து, காய்கறியை 4-7 நிமிடங்கள் கலந்து சமைக்கவும். வறுத்த மாவு அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி, உணவின் சுவையை அதிகரிக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kitchen hacks in tamil simple steps to remove excess oil from cooked food tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com