உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு துவையல்; எப்படி செய்யணும் தெரியுமா?

Kollu thuvaiyal seyvathu eppadi: ஏகப்பட்ட மருத்துவ பண்புகளை கொண்டுள்ள கொள்ளுவில் எப்படி துவையல் தயார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போமா!

Kollu recipes in tamil: steps to make Horsegram chutney tamil

Kollu recipes in tamil: ‘இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்பது நம் முன்னோர் எழுதிய பழமொழி. அந்த வகையில் உடல் எடையை குறைக்க உதவும் முக்கிய பொருட்களில் கொள்ளு முதன்மையானதாக ‘கொள்ளு’ உள்ளது. அதோடு இவை ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கிய ஒன்றாகவும் உள்ளது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த ஆரோக்கியமான உணவை ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். மேலும் ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம்.

கொள்ளுவை நன்கு அரைத்து, சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தி வரலாம். தவிர, இவற்றை ஊறவைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் உள்ளன.

இப்படி ஏகப்பட்ட மருத்துவ பண்புகளை கொண்டுள்ள கொள்ளுவில் எப்படி துவையல் தயார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போமா!

கொள்ளு துவையல் செய்யத் தேவையான பொருட்கள்:-

கொள்ளு – 1 கப்
எண்ணெய்
பெருங்காயம் – 1 துளி அளவு
காய்ந்த மிளகாய் – 4, 5
பூண்டு – 7, 9 பள்ளு
கருவேப்பிலை – 3 கொத்து
தேங்காய் துருவல் – சிறிய கப் 1
புளி – 1 சுண்டக்காய் அளவு

கொள்ளு துவையல் செய்முறை:

முதலில் கொள்ளுவை ஒரு பாத்திரத்தில் இட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஆற வைத்துக்கொள்ளவும். பிறகு தனியாக ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, கருவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக இட்டு நன்கு வதக்கி கொள்ளவும்.

அதன் பின்னர், அவற்றோடு தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பிறகு அதில் புளி சேர்த்து நன்கு வதக்கி கீழே இறக்கவும்.

இந்த கலவை நன்கு ஆறிய பிறகு, முன்பு வறுத்து வைத்திருந்த கொள்ளு மற்றும் இந்த வதக்கிய கலவையை சேர்த்து ஒரு மிக்சியில் இட்டு துவையலுக்கு ஏற்றார் போல் அரைத்து கொள்ளவும். அரைக்கும் போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

இப்போது அற்புதமான கொள்ளு துவையல் தயாராக இருக்கும். இவற்றை உங்களுக்கு விருப்பமான உணவுகளுடன் சேர்த்து ருசிக்கவும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kollu recipes in tamil steps to make horsegram chutney tamil

Next Story
நிச்சயத்திற்கு ரூ.2500 செலவில் வீட்டிலேயே மேக்-அப் செய்யலாம் – அனிதா சம்பத் டிப்ஸ்!Bigg Boss Anita Sampath Latest Viral Video Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com