kolukattai recipe in tamil: கொழுக்கட்டை என்றாலே பலருக்கும் மிகவும் பிடிக்கும் ஒன்றாக உள்ளது. இதில் பால் கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, பூரணம் வைத்த கொழுக்கட்டை என விதவிதமாக தயார் செய்யலாம்.
Advertisment
அந்த வகையில் மிகவும் டேஸ்டான ஹோட்டல் ஸ்டைல் இன்ஸ்டன்ட் கார கொழுக்கட்டை எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
முதலில் 1/2 கப் இட்லி ரவையை எடுத்து அதற்கு 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி வெறும் 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
இதற்கிடையில், ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய், கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறவும். பின்னர், வெங்காயம் கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து கண்ணாடி போல் வரும் வரை வதக்கிக்கொள்ளவும். அதன்பின்னர் உப்பு சேர்த்து வதக்கி பிறகு தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
சிறிது நிமிடங்கள் கழித்து ஊற வைத்துள்ள இட்லி ரவையை அவற்றோடு சேர்த்துக் கிளறவும். இவை உப்புமா போல் வரும் வரை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும். அவை ஓரளவு கெட்டியாக வந்தவுடன் அவற்றை ஆற வைத்து கொழுக்கட்டை போன்று தட்டையாகவோ அல்லது உப்பு உருண்டை போல் உருண்டைகளாவோ பிடித்து இட்லி அவிய வைக்கும் பாத்திரத்தில் அவித்து எடுக்கவும்.
இப்போது நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த சுவையான காரக் கொழுக்கட்டை தயராக இருக்கும். அவற்றை நீங்கள் விரும்பி சட்டினிகளுடன் சேர்த்து பரிமாறி சுவைக்கவும்.