kurma recipe in tamil: பீட்ரூட் நமது ஊர்களில் மலிவான விலையில் கிடைக்கும் காய்கறியில் ஒன்று ஆகும். இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்தம் குறைகிறது மற்றும் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கின்றது.
இதய நோய் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பீட்ரூட், டிமென்ஷியா எனும் மூளை சம்பந்தமான பிரச்சனைக்கும் தீர்வு தருகின்றது. மேலும் உடல் எடைப் பிரச்சினை உடையவர்களுக்கு எடையை சரியான அளவு பராமரிக்க உதவுகிறது.
பீட்ரூடில் புற்றுநோயை தடுக்கும் அளவுக்கு சத்துக்கள் அடங்கியுள்ளன என சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த அற்புதமான காய்கறியில் சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என உங்களுக்கு விருப்பமான காலை உணவுகளுக்கு ஏற்ற குருமா எப்படி தயார் செய்யலாம் என சிறிய குறிப்பை இங்கு வழங்கியுள்ளோம்.
பீட்ரூட் குருமா செய்யத் தேவையான பொருட்கள்:-
பீட்ரூட் – 400 கிராம் (துருவியது)
அரைக்க – பேஸ்ட் 1
பூண்டு – 10 பற்கள்
பெருஞ்சீரகம் (அ) சோம்பு – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – கொத்து
தண்ணீர் – சிறிதளவு
ஒரு மிக்சி எடுத்து மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும் .
அரைக்க – பேஸ்ட் 2
1 கப் துருவிய தேங்காய்,
4 ஊறவைத்த பாதாம்,
4 ஊறவைத்த முந்திரி
இவையனைத்தையும் 1 கப் தண்ணீருடன் சேர்த்து நன்றாக அரைக்கவும் பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்
பீட்ரூட் குருமா செய்முறை:-
இப்போது ஒரு சூடான கடாயில், எண்ணெய் சேர்க்கவும். 1 இலவங்கப்பட்டை, 3 கிராம்பு, 1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு 1 நறுக்கிய தக்காளி, சிறிதளவு புதினா இலைகள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் 2 டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
தொடர்ந்து பேஸ்ட் 1-யை சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.
அதன்பின்னர் துருவிய பீட்ரூட் மற்றும் சிறிதளவு தண்ணீரைச் சேர்த்து 10 நிமிடம் நன்கு வேக விடவும்.
பீட்ரூட் வெந்ததும், பேஸ்ட் 2 – யை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின்னர் கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து கீழே இறக்கவும். அவற்றை உங்கள் உணவுகளுடன் ருசித்து மகிழவும்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“