உடல் பருமன் பிரச்சனை அனைவருக்கும் இருக்க கூடிய ஒன்று தான். அதுவும் வீட்டில் இருப்பவர்கள் உடல் எடையை எப்படி குறைப்பது என்று யாருக்கும் தெரியாது. நிறைய வேலைகள் செய்கிறேன் ஆனால் உடல் எடை குறையவில்லை என்று புலம்புவார்கள். அப்படி இருப்பவர்களுக்கு ஒரு சில உடல் எடை குறைப்பதர்கான டிப்ஸ்களை மருத்துவர் அருண் கார்த்திக் தனது தனது யூடியூப் பக்கத்தில் கூரியிருப்பதாவது,
டிப்ஸ் 1: ஈவ்னிங் காபி,டீ நிறுத்தி விட வேண்டும். அப்போது தான் அதனுடன் சேர்த்து சாப்பிடும் ஸ்நாக்ஸ்களையும் நிறுத்துவோம். அப்போ தான் சரியான நேரத்தில் பசி எடுக்கும். சரியான அளவில் சாப்பிடவும் முடியும் என்று மருத்துவர் கூறுகிறார்.
டிப்ஸ் 2: சரியான நேரத்தில் உணவு சாப்பிடுதல். இரவில் சீக்கிரம் உணவு சாப்பிட வேண்டும். இரவு உணவு 7 மணிக்கு சாப்பிடலாம். அப்போது தான் காலை உணவும் சீக்கிரம் சாப்பிடலாம். இது தேவையில்லாத பசியை தூண்டாது. ஸ்நாக்ஸ் சாப்பிட தூண்டாது.
டிப்ஸ் 3: மீதம் இருக்கும் சாதத்தை சாப்பிடாதீர்கள். மதியம் சமைத்த உணவு மீதியாகி விட்டதே என்று அதை இரவு உணவாக சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிடுவது உடல் எடையை கூட்டும்.
4 EASY WEIGHT LOSS TIPS FOR WOMEN IN TAMIL | #dr_arunkarthik | பெண்கள் இடை குறைய 4 எளிய வழிகள்
டிப்ஸ் 4: தினசரி ஒரு 45 நிமிடம் நடைபயிற்சி அவசியம். எப்போது வேண்டுமானாலும் ஒரு 45 நிமிடம் நடைபயிற்சி செய்யுங்கள். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இந்த 4 டிப்ஸ்களை பின்பற்றினாலே வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களது உட எடையை சரியாக வைத்து கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.