Vijay TV DD: தமிழ் பொழுதுப் போக்கு உலகத்தில், சினிமா பிரபலங்களுக்கு இணையாக சின்னத்திரை பிரபலங்களுக்கும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக சின்னத்திரையில் வரும் ஆங்கர்களுக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர்களின் பேச்சு, ஸ்டைல், நடை, உடை பாவனை என பலவற்றையும் கவனித்து வரும் ரசிகர்கள், தனித்துவமான ஸ்டைலைக் கொண்டவர்களு பெரும் ஆதரவளித்து வருகிறார்கள். அந்த வகையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சித் துரையில் கொடி கட்டி பறந்துக் கொண்டிருக்கிறார் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி.
பள்ளியில் படிக்கும் போதே விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக சின்னத்திரைக்கு அறிமுகமான டிடி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம், ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதோடு விஜய் டிவி-யில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருந்துள்ளார்.
Advertisment
Advertisements
பச்சை நிறமே பச்சை நிறமேன்னு பாட தோணுதா?
சென்னையில் பிறந்து வளர்ந்த டிடி, கிங்ஸ்ஃபோர்ட் கான்வென்ட் மற்றும் சி.எஸ்.ஐ ஜெஸ்ஸி மோசஸ் ஹயர் செண்டரி பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். பயணம் மற்றும் சுற்றுலா நிர்வாகத்தில் எம்.பில் படித்தார் டிடி. மலையாளம், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, பிரஞ்சு போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். தந்தையை இளம் வயதிலேயே இழந்துவிட்டதால், குடும்ப சூழ்நிலை காரணமாக வெகு விரைவில் வேலைக்குச் செல்லும் நிர்பந்தத்திற்கு ஆளானார்.
டிரடிஷனல் உடையில் டிடி...
1990-ல் சுபயாத்ரா எனும் மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். விசில், நள தமயந்தி, உள்ளிட்ட படங்களிலும் தனது ஆரம்ப கால நாட்களில் நடித்தார். அதோடு, சன் டிவி-யில் ஒளிபரப்பான சிந்துபாத் உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இன்று தொகுப்பாளினியாக வேண்டும் என்று நினைக்கும் பலருக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார். டிடி-க்கு மெரூன் கலர் என்றால் ரொம்பவும் பிடிக்குமாம், அந்த கலரில் சேலை என்றால் சொல்லவே வேண்டாம். நடிகர்கள் என்றால் ரஜினிகாந்த், விஜய், பிரகாஷ் ராஜ் தான் டிவி-யின் ஃபேவரிட். நடிகை என்றால் அனுஷ்காவுக்கு தீவிர விசிறி. ஆபரணங்களைப் பொறுத்தவரை, வாட்ச்சும், காதணிகளும் டிடி-க்கு ரொம்பவும் பிடித்தவைகளாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.