scorecardresearch

கோடை வெயிலுக்கு ஏற்ற சில்சில் மாம்பழ மில்க் ஷேக்… சிம்பிள் ஸ்டெப்ஸ் பாருங்க!

mango milkshake recipe with ice cream in tamil: மாம்பழம் நார்ச்சத்து கொண்ட பழம் என்பதால், இது செரிமான செயல்பாட்டுக்கு உதவி புரிகிறது.

mango benefits in tamil: how to make mango milkshake recipe tamil

mango benefits in tamil: முக்கனிகளான ஒன்றான மாம்பழத்திற்கு தனி இடம் உண்டு. கோடை மாதங்களில் அதிகமாக கிடைக்கும் இந்த அற்புத பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதன் பழுத்த கனிகளை அப்படியே உண்ணலாம். ஜூஸாகவும் பருகி வரலாம்.

மாம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்:

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது

மாம்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ உள்ளன. மேலும், இவை 25 வகையான கரோட்டினாய்டுகளும் உள்ளடங்கி இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

கொழுப்பு அளவை குறைக்கிறது

மாம்பழத்தில் வைட்டமின் சி சத்து, பெக்டின், நார்ச்சத்து போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன. இவை உடலில் கொழுப்பு அளவை குறைக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன.

கண் பாதுகாப்பு உதவுகிறது

ஒரு கப் மாம்பழ துண்டுகள் சாப்பிடுவது அன்றாட வைட்டமின் ஏ சத்து தேவையில் 25 சதவீதத்தை பூர்த்தி செய்யலாம். வைட்டமின் ஏ கண்களுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியது என்பதால் கண் நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவுகிறது.

சரும தூய்மைக்கு உதவுகிறது

மாம்பழம் சருமத்தை சுத்தப்படும் கிளீன்சராகவும் செயல்படக்கூடியது. மாம்பழ கூழை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு உலர்ந்ததும் கழுவிவிடலாம். சருமம் புத்துணர்வுடன் காட்சியளிக்கும். மேலும் இது சரும துளைகளும் நீக்குகிறது.

நினைவாற்றலை அதிகரிக்கிறது

மாம்பழத்தில் இருக்கும் குளூட்டமைன் அமிலம், நினைவாற்றல் திறனை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் மாம்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் டார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம் போன்றவை உடலின் கார சமநிலையை சீராக பராமரிக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன.

புற்றுநோய் பாதிப்புக்கு உதவுகிறது

மாம்பழத்தில் இருக்கும் குவார்செட்டைன், ஐசோகுவார்சிட்ரின், அஸ்ட்ராகேலின், பிஸ்டின், கேலிக் ஆசிட் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள், பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், புராஸ்டேட் புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவுகிறது.

இரும்பு சத்து நிறைந்தது

மாம்பழத்தில் இரும்புச்சத்தும் நிரம்பி காண்டப்படுகிறது. எனவே, இது ரத்தசோகை பிரச்சனையை எதிர்கொள்பவர்களுக்கு இயற்கையாகவே தீர்வு வழங்கக்கூடியதாக உள்ளது. இதனால் இரும்புச்சத்து குறைபாடு கொண்ட பெண்கள் மாம்பழத்தை கண்டிப்பாக சாப்பிட்டு வரலாம்.

எடை குறைப்புக்கு உதவுகிறது

மாம்பழம் நார்ச்சத்து கொண்ட பழம் என்பதால் செரிமான செயல்பாட்டுக்கு உதவி புரிகிறது. மேலும் உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரித்து எடை குறைவதற்கும் வழிவகை செய்கிறது.

இன்சுலின் அளவை ஒழுங்குபடுத்துகிறது

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மாம்பழ இலைகள் உதவுகின்றன. 5-6 மாம்பழ இலைகளை நீரில் போட்டு கொதிக்கவிட்டு, இரவு முழுவதும் அப்படியே ஊறவைத்து, காலையில் அந்த நீரை வடிகட்டி பருகலாம். இது உடலில் இன்சுலின் அளவை ஒழுங்குபடுத்த உதவும். மாம்பழம் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் (41-60) அளவீடு கொண்டது. அதனால் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்க அனுமதிக்காது.

மாம்பழ மில்க் ஷேக் தயார் செய்யத் தேவையான பொருட்கள்:

மாம்பழம் – 2
குளிர்ந்த பால் – 2 கப்
வெனிலா ஐஸ்க்ரீம் – 1 ஸ்பூன்
சர்க்கரை – 3 ஸ்பூன்

மாம்பழ மில்க் ஷேக் சிம்பிள் செய்முறை:

முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, அதனை துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

பிறகு அவற்றை மிக்ஸியில் சேர்த்து, அத்துடன் சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பின்பு அதில் பால் மற்றும் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.

இப்போது நீங்கள் எதிர்பாத்த சில்சில் மாம்பழ மில்க் ஷேக் ரெடி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Mango benefits in tamil how to make mango milkshake recipe tamil