அகத்திக்கீரையின் நன்மைகள் மற்றும் எந்த உணவுகளுடன் அகத்திக்கீரையை சேர்த்து சாப்பிடக் கூடாது என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
நம் உடலில் நோய் எதிர்ப்பு தன்மையை பல மடங்கு அதிகரிக்க, எந்த விதமான நோய்த் தொற்று பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கு முக்கியமான உணவாக விளங்குவது அகத்திக்கீரை.
அகத்திக்கீரையில் வைட்டமின் பி1 உள்ளது. நம் மூளை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட இது உதவும். நியாபக சக்தியை அதிகரிக்க இது உதவுகிறது.
அதிகமாக தலைவலி ஏற்படுவதை தடுக்க அகத்திக்கீரை உதவுகிறது. ஒற்றைத் தலைவலி போன்ற பல பிரச்சனைகளுக்கு இது மருந்தாக அமைகிறது.
அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் அன்டி மைக்ரோபியலாக செயல்படும். இதனால் நோய்த்தொற்று பாதிப்பு தடுக்கப்படுகிறது. காசநோய், மலேரியா போன்ற நோய்த் தொற்று பாதிப்புகளில் இருந்து கூட அகத்திக்கீரை பாதுகாக்கிறது.
10 நாள்களுக்கு ஒருமுறை அகத்திக்கீரையை உணவில் எடுத்துக் கொண்டால் புற்றுநோய் ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கிறது. குறிப்பாக, நுரையீரல் புற்றுநோயை இது தடுக்க உதவுகிறது.
அகத்திக்கீரையில் மெக்னீஷியம் மற்றும் பொட்டாஷியம் அதிகமாக இருக்கிறது. இவை உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. இரும்பு சத்து இதில் அதிகமாக இருக்கிறது.
உடல் சூடு, உஷ்ணத்தை சீராக்க அகத்திக்கீரை உதவும். மன அழுத்தத்தை இயற்கையான முறையில் குறைக்க அகத்திக்கீரை உதவுகிறது. அல்சர் நோய் பாதிப்பு ஏற்படுவதையும் அகத்திக்கீரை தடுக்கிறது. மலச்சிக்கல் ஏற்படுவதையும் குறைக்கிறது.
இந்தக் கீரையை தினசரி சாப்பிட வேண்டுமென்ற அவசியம் கிடையாது. 10 நாள்களுக்கு ஒரு முறை சாப்பிடலாம். கோழிக் கறியுடன் சேர்த்து அகத்திக் கீரையை சாப்பிடக் கூடாது. மது அருந்து பழக்கம் இருப்பவர்கள், மது அருந்திய உடனேயே அகத்திக்கீரையை சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு அகத்திக்கீரையின் தன்மைகள் குறித்து மருத்துவர் மைதிலி கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“