அதிக உடல் எடை, சுகர் பிரச்னைக்கு தீர்வு… சோளம் இப்படி பயன்படுத்துங்க!

Why should you need to add chola or jowar or sorghum in your food in tamil: சில நேரங்களில் ஆயுர்வேத மருத்துவர்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு அரிசி சாதத்திற்கு பதிலாக சோளம் சாப்பிட பரிந்துரை செய்வார்கள். ஏனெனில் இது எடை கட்டுப்பாட்டிற்கும் கெட்ட கொழுப்பைக் குறைப்பதற்கும் உதவுகிறது.

Millet recipes tamil: Jowar Roti or Chola Mavu Roti making in tamil

Millet recipes tamil: நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கும் போது நமது உணவுப் பழக்கங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதனால்தான் வல்லுநர்கள் அடிக்கடி ஆரோக்கியமான உணவு வகைகள் மற்றும் உணவுகளின் சேர்க்கைகளைச் சேர்க்க சில உணவு மாற்றங்களைச் செய்ய பரிந்துரைக்கிறார்கள். இவை உடலின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவது மட்டுமல்லாமல், ஒரு நாள் முழுவதும் திருப்தியாகவும் ஆற்றலுடனும் உணரவும் உதவுகிறது.

நீங்கள் சில ஆரோக்கியமான உணவுகளை தயார் செய்ய ருசிக்க விரும்பினால், அதற்கு சோளத்தை தேர்வு செய்யலாம்.

“சோளம் ஆயுர்வேத சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு அற்புதமான பசையம் இல்லாத தானியமாகும். கோடை காலத்தில் அதன் குளிரூட்டல் மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய பண்புகள் மற்றும் அதன் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவைகள் காரணமாக சரியானது, ”என்றும் சோளத்தை பல்வேறு வழிகளில் பயன்படுத்த முடியும் என்றும் ஆயுர்வேத ஆலோசகர் பூஜா கூறுகிறார்.

நீங்கள் ஏன் சோளம் சாப்பிட வேண்டும்?

“சில நேரங்களில் ஆயுர்வேத மருத்துவர்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு அரிசி சாதத்திற்கு பதிலாக சோளம் சாப்பிட பரிந்துரை செய்வார்கள். ஏனெனில் இது எடை கட்டுப்பாட்டிற்கும் கெட்ட கொழுப்பைக் குறைப்பதற்கும் உதவுகிறது. அதிகரித்த நார் செரிமான ஆரோக்கியத்திற்கும் சிறந்தது, ”என்று பூஜா குறிப்பிடுகிறார்.

நீரிழிவு நோயாளிகளுக்கு இது எவ்வாறு உதவுகிறது?

ஒரு ஆரோக்கியமான தானியமாக சோளம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, அதாவது இது சர்க்கரை அதிகரிப்பை ஏற்படுத்தாது மற்றும் இன்சுலின் அளவை பராமரிக்க உதவுகிறது. இது ஹார்மோன் மற்றும் இதய ஆரோக்கியத்தை சீராக்க உதவுகிறது. சோளம் எளிதில் ஜீரணமாகிறது.

சோளத்தில் புரதம், உணவு நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் சி ஆகிய சத்துக்கள் உள்ளன.

சோளத்தை எப்படி பயன்படுத்தலாம்?

சோளம் ரோட்லாஸ், சோளம் ரோடிஸ், உப்மா, புலாவ் போன்ற உணவுகளை சோளத்தில் நாம் தயார் செய்து மகிழலாம்.

சோளம் ரோட்டி செய்வது எப்படி?

முதலில் 1/2 கப் சோளம் மாவு 1 1/2 கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரம் எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

தண்ணீரின் சூடு குறைந்ததும் அதில் மாவை இட்டு 15 நிமிடங்கள் பிசையவும். பிசையும் போது மாவு உடைவதைத் தவிர்க்கவும்.

மாவை சப்பாத்தி உருண்டைகள் போல் பிடித்து கையால் ரோட்டி போல் தேய்த்து கொள்ளவும்.

இப்போது தோசை அல்லது தவா கல்லில் இட்டு எடுத்துக்கொள்ளவும்.

பிறகு தயார் செய்த சோளம் ரோட்டியுடன் சிறிதளவு நெய் சேர்த்து ருசித்து மகிழவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Millet recipes tamil jowar roti or chola mavu roti making in tamil

Next Story
இங்கு தான் பெண் ஆணைத் தேடுகிறாள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com