scorecardresearch

எடை இழப்பு உதவும் பாசிப்பருப்பு… இவ்வளவு பயன் இருக்கு!

Is moong dal good to lose weight? In tamil: பாசிப்பருப்பு, இரும்பின் நல்ல ஆதாரமாக இருப்பதால், இது இரத்த சிவப்பணுக்களின் (RBCs) எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.

moong dal benefits in tamil: Moong Dal For Weight Loss

Weight Loss foods in tamil: சுடச் சுட தயாரான சாதத்துடன் பருப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து சுவைத்தால் அருமையாக இருக்கும். மிகக் சுலபமாகச் செய்யக்கூடிய இந்த உணவு ஆரோக்கியமானது என்றும், உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஏற்றது என்றும் ஊட்டச்சத்து நிபுணர்களால் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இங்கு மக்கள் குழப்பமடைவது என்னவென்றால், பருப்பில் எந்த வகை பருப்பை சேர்த்துக் கொள்வது என்பதில் தான்.

ஏன்னென்றால், பருப்புகளில் 10 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையையும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளன. அந்த வகையில், எடை இழப்பு அதிகம் உதவும் பருப்பு வகையில் பாசிப்பருப்பு முதன்மையான ஒன்றாக உள்ளது.

பொதுவாக, பருப்புகள் புரதத்தின் நல்ல மூலமாகும். இவை ஆரோக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளன. உங்கள் உணவில் அவ்வப்போது அனைத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் எடை இழப்பு என்று வரும் போது பாசிப்பருப்பு சிறந்த தேர்வாகும். இவற்றில் கலோரிகள் குறைவு. மேலும், இவை ஜீரணிக்க எளிதானதாகவும், மலச்சிக்கல் அபாயத்தை குறைக்கவும் செய்கிறது.

ஊட்டச்சத்து மதிப்பு

ஒரு கப் (200 கிராம்) பாசிப் பருப்பில் உள்ளது:

கலோரிகள்: 212

கொழுப்பு: 0.8 கிராம்

புரதம்: 14.2 கிராம்

கார்போஹைட்ரேட்டுகள்: 38.7 கிராம்

ஃபைபர்: 15.4 கிராம்

ஃபோலேட், மாங்கனீஸ், வைட்டமின் பி1, பாஸ்பரஸ், இரும்பு, தாமிரம், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை இந்த வகை பருப்பில் நிறைந்துள்ளன. இந்த தாதுக்கள் அனைத்தும் உங்கள் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை உருவாக்கவும், உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கவும் உதவுகின்றன.

எடை இழப்புக்கு பாசிப்பருப்பு:

பாசிப்பருப்பு உயர்தர தாவர புரதத்தின் மிகச் சிறந்த மூலமாகும். இது புரதத்தின் முழுமையற்ற ஆதாரமாக இருந்தாலும், அரிசியுடன் இணைந்தால் அது புரதத்தின் முழுமையான ஆதாரமாகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது புரத நுகர்வு அதிகரிப்பது தசைகளை உருவாக்க மற்றும் திருப்தியை மேம்படுத்த உதவும்.

புரோட்டீன் என்பது ஒரு மேக்ரோநியூட்ரியண்ட் ஆகும், இது தசைகளை உருவாக்கி மெலிந்ததாக இருக்க வேண்டும். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இந்த பருப்பு உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் மனநிறைவை அதிகரிக்கிறது. இது மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் உங்கள் உடல் நன்றாக செயல்பட உதவுகிறது.

மிக முக்கியமாக, இது சமைப்பது எளிதானது மற்றும் பிற பருப்பு வகைகளான துவரம் பருப்பு மற்றும் சிவப்பு பருப்பு போன்றவற்றை ஒப்பிடும்போது மிகவும் இலகுவாக இருக்கும்.

பாசிப்பருப்பு எடை இழப்புக்கு மட்டுமல்லாமல், பல வழிகளில் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இந்த பருப்பில் உள்ள நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ரால் படிவதைத் தடுக்கவும், நல்ல இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

இவற்றில் உள்ள சுவடு தாதுக்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கவும், சுருக்கங்கள் இல்லாமல் இளமையாக இருக்கவும் உதவுகிறது.

இவை இரும்பின் நல்ல ஆதாரமாக இருப்பதால், இரத்த சிவப்பணுக்களின் (RBCs) எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது உதவுகிறது. மேலும், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகள் கூட பாசிப்பருப்பை தங்களது உணவுகளுடன் சேர்த்து வரலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Moong dal benefits in tamil moong dal for weight loss