சாம்பார், ரசம், புளிக்குழம்பு என ஒரேபோன்ற குழம்பு வைத்து சலித்துப்போனவர்களுக்கான சூப்பர் சாய்ஸ், மோர்க்குழம்பு தான். குறைந்த பொருட்களை வைத்து தான் நாம் செய்யப் போகின்றோம்
உடல் குளிர்ச்சிக்கும், ஜீரணிக்கவும் உதவும் மோர் குழம்பை எளிமையாக செய்வது குறித்து இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
புளித்த தயிர் – 1/2 லிட்டர் துவரம் பருப்பு – 2 டேபில் ஸ்பூன் அரிசி-1/2 டேபில் ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 15 (உங்கள் காரத்திற்கு ஏற்ப)
செய்முறை:
முதலில் ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்ற வேண்டும். அதில் துவரம் பருப்பு, பச்சரிசி, காய்ந்த மிளகாய் என மூன்றையும் நன்றாக வதக்க வேண்டும். அதை சிறிது நேரம் ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.
இரண்டாவது, குக்கரை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 1 ஸ்பூன் கடுகு போட்டு, வரமிளகாய் 2 போட்டு, கருவேப்பிலை போட்டு, ஒரு சிட்டிகை பெருங்காயம் போட்டு, அதன்பின்பு சுரக்காய் போட்டு, இரண்டு நிமிடம் வதக்கி விட்டு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் கூட்டு மாவை சேர்க்க வேண்டும்.
குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போட வேண்டும். குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு, ஒரு கொதி வந்ததும், சிம்மில் வைத்து விட்டு ஒரு விசில் வைக்க வேண்டும். சில சமயங்களின் அந்த கேப்ற்குள் மாறிவிடும்.
இதற்கிடையில், 1/2 லிட்டர் தயிரை , மோர்க் அடைகின்ற மத்தில் நன்றாக கடைந்து கொள்ள வேண்டும். சரியான பக்குவத்தில் மோரை கரைத்து அவசியமாகும். கட்டாயம் தயிர் கட்டி கட்டியாக இருக்கக் கூடாது.ரொம்பவும் தயிர் புளிப்பு சுவையிலும் இருக்கக் கூடாது.
விசில் வந்த பிறகு, குக்கரைத் திறந்து தயாராக வைத்திருக்கும் தயிரை அதில் ஊற்றி, அடுப்பில் மிதமான தீயில் வைத்து ஒரே கொதி வைத்தால் போதும்.
சுவையான மோர் குழம்பு தயார்.முக்கியமான விஷயம். மோர் குழம்பை சூடாக மூடி விடக்கூடாது. அடுப்பிலிருந்து இறக்கியதும் நன்றாக ஆற வைக்க வேண்டும். அவ்வளவு தான், மோர் குழம்பு ரெடி. இதை உங்கள் உணவுகளுடன் பரிமாறி சுவைக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil