moringa flower recipe in tamil: நம்முடைய ஊர்களில் பரவலாக காணப்படும் மர வகைகளில் முருங்கையும் ஒன்று. இது ஒரு சக்தி வாய்ந்த மூலிகை மரம் என்றால் நிச்சயம் மிகையாகாது. இவற்றின் பூக்கள், காய்கள், மற்றும் இலைகள் என அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.
அந்த வகையில், வசந்த காலத்தில் எளிதில் கிடைக்கக்கூடியவை இவற்றின் பூக்கள் வைட்டமின் ஏ இன் நல்ல மூலமாகும். இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஒட்டுமொத்த பார்வை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும் ஊட்டச்சத்து ஆகும்.
இந்த அற்புத பூக்களில் எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம், வீக்கத்தைக் குறைக்கும் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம், இரும்பு மற்றும் அமினோ அமிலங்கள் நிரம்பி காணப்படுகின்றன.
இப்படியான முருங்கைப் பூவில் சுவையான மற்றும் சத்தான குழம்பு எப்படி தயார் செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
முருங்கைப் பூ குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்:
முருங்கைப் பூக்கள் - 1 கப் (வேகவைத்தது)
பட்டாணி - ½ கப் (வேகவைத்தது)
வெங்காயம் - 2 (நடுத்தரமானது - பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (நடுத்தரமானது - பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1-2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 அங்குலம் (துருவியது)
கரம் மசாலா - ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி
தயிர் - 4 டீஸ்பூன்
கடுகு எண்ணெய் - 2-3 டீஸ்பூன்
கல் உப்பு - சுவைக்கு
முருங்கைப் பூ குழம்பு சிம்பிள் செய்முறை
முதலில் ஒரு கடாயில், எண்ணெயை சூடாக்கி வெங்காயத்தை வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாற ஆரம்பித்தவுடன், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வேகவைக்கவும்.
தொடர்ந்து நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், கொத்தமல்லித் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்னர், தக்காளி கிட்டத்தட்ட சதைப்பற்றுடன் இருப்பதைப் பார்த்தவுடன், குறைந்த தீயில் தயிர் சேர்க்கவும்.
அதைத் தொடர்ந்து வேகவைத்து வடிகட்டிய முருங்கைப் பூக்கள் மற்றும் வேகவைத்த பட்டாணி சேர்க்கவும். மிதமான தீயில் தொடர்ந்து கிளறி சுமார் 5 நிமிடங்கள் முழுவதையும் சமைக்கவும்.
இப்போது உப்பு சேர்த்து, அனைத்தையும் கலந்து, இந்த கறியை 10-12 நிமிடங்கள் குறைந்த தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.
10 நிமிடங்களுக்குப் பிறகு, பூக்கள் மற்றும் பட்டாணி நன்கு வேகவைக்கப்பட்டு, குழம்புடன் நன்கு இணைந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
இவற்றில் தண்ணீர் அதிகமாக இருந்தால் தணலை அதிகப்படுத்தி சிறிது நேரம் சமைத்து கூடுதல் தண்ணீரை (ஏதேனும் இருந்தால்) குறைக்கலாம்.
பிறகு, பரிமாறும் முன் கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி இலைகளை தாராளமாக தூவி பரிமாறி ருசித்து மகிழலாம்.
முருங்கைப் பூக்களின் கசப்பைக் குறைக்க அவற்றை நன்கு கொதிக்க வைக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.