Moringa leaves recipes in tamil: இந்தியாவில் வீதி எங்கும் காணப்படும் முருங்கை மரம் நமக்கு ஏராளமான மருத்துவப் பலன்களை வழங்கி வருகிறது. முருங்கை இலையை காய வைத்து, பொடியாக்கி காலை வேளையில் தேநீரில் கலந்து முருங்கை இலை டீயாக குடித்து வரலாம்.
முருங்கை இலைப் பொடியானது, தோல் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முருங்கை இலையில், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு, ஆண்டிடிரஸன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் செறிந்து காணப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு டீ அல்லது காபியுடன் முருங்கை இலைப் பொடியை கலந்து உட்கொள்வதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
இப்படி எண்ணற்ற பயன்களை கொண்டுள்ள முருங்கையில் எப்படி முருங்கை இலை கஞ்சி தயார் செய்யலாம் என்று பார்ப்போமா!
முருங்கை இலை கஞ்சி செய்யத் தேவையான பொருட்கள்:-
பச்சை பயிறு – 1கப்
அரிசி அல்லது புரோக்கன் வீட் – 1/4 கப்
பூண்டு – 7
கருப்பு மிளகு – 1 டீ ஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீ ஸ்பூன்
முருங்கை இலை கஞ்சி செய்முறை:-
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை முதலில் தண்ணீர் நன்றாக அலசிக் கொள்ளவும்.
பிறகு ஒரு குக்கர் எடுத்து அதில் அலசிய பொருட்களை அதில் சேர்க்கவும்.
இவற்றுடன் 2 கப் முருங்கை இலை சேர்க்கவும். அதனுடன், 4 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
பின்னர், குக்கர் மூடியை மூடி அடுப்பில் வைத்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
அவை நன்கு வெந்து வந்த பின்னர், அவற்றுடன் தேங்காய் துருவல் சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது அவற்றை சுவைத்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil