scorecardresearch

செலவே இல்லாத ஹெல்தி உணவு… முருங்கைக் கீரை குழம்பு வைப்பது எப்படி?

Murungai Keerai Masiyal recipe in tamil: நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித்தரும் முருங்கை கீரையில் எப்படி சுவையான குழம்பு வைக்கலாம் என்று பார்ப்போம்.

Murungai keerai Kulambu in tamil: how to make murungai keerai kuzhambu tamil

Murungai keerai Kulambu in tamil: கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது குறைந்து வந்தாலும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தெரிவு செய்து உண்பது அவசிமான ஒன்றாக உள்ளது. அப்படி நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாங்கள் அன்றாட சில குறிப்புகளை இங்கு வழங்கி வருகிறோம்.

அந்த வகையில் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித்தரும் முருங்கை கீரையில் எப்படி சுவையான குழம்பு வைக்கலாம் என்று இன்று பார்க்கலாம்.

முருங்கைக் கீரை குழம்பு சிம்பிள் டிப்ஸ்

முதலில் 2 கைப்பிடி முருங்கைக் கீரையை எடுத்து நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு அலசி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு, 50 கிராம் துவரம்பருப்பை குக்கரில் இட்டு, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்றாக குழைய வேக வைத்து, பின் தனியாக எடுத்துவைக்கவும்.

இதற்கிடையில், ஒரு பாத்திரம் எடுத்து அடுப்பில் வைத்து சூடானதும், அதில் நல்லெண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி காய்ந்தவுடன், 1/2 ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் சீரகம், 3 சிவப்பு மிளகாய், 15 பூண்டு, 10 சின்ன வெங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

தொடர்ந்து நறுக்கிய 2 தக்காளி, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் குழம்பு மிளகாய் தூள் அல்லது சாம்பார் தூள் 1 ஸ்பூன் சேர்த்து மீண்டும் வதக்கி கொள்ளவும்.

இதன்பின், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பிறகு, முன்னர் வேகவைத்த பருப்பை சேர்த்து மிக்ஸ் செய்துகொள்ளவும். தொடர்ந்து முன்பு அலசி தயாராக வைத்திருக்கும் முருங்கைக் கீரையையும் சேர்த்து, நன்றாக கலந்து கொள்ளவும்.

இவை இரண்டு நிமிடங்களுக்கு நன்றாக கொதித்து வந்தவுடன் சிறிய துண்டு புளியை சேர்க்கவும். அவற்றையும் நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும்.

இவையனைத்தும் நன்கு கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைக்கவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த முருங்கைக்கீரை குழம்பு தயராக இருக்கும்.

இவற்றை மசியலாக மாற்றி ருசிக்க, சுடச்சுட தயாராக இருக்கும் இந்த முருங்கைக்கீரையை அப்படியே ஒரு மண் சட்டைக்கு மாற்றிக்கொள்ளவும். பின்னர், பருப்பு கடையும் கட்டையை கொண்டு நன்கு கடைந்து கொள்ளவும். இப்போது சுவையான முருங்கைக்கீரை கடையல் ரெடியாக இருக்கும். இவற்றை உங்களுக்கு பிடித்த உணவுகளுடன் சேர்த்து சுவைக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Murungai keerai kulambu in tamil how to make murungai keerai kuzhambu tamil