Nakshathra Nagesh : தொலைக்காட்சி தொகுப்பாளினி, சீரியல் நடிகை பிறகு சினிமா ஹீரோயின் என்ற ட்ரெண்ட் தான் தற்போது சின்னத்திரை உலகில் இருந்து வருகிறது. அந்த லிஸ்டில் தற்போது நக்ஷத்ரா நாக்கேஷும் இணைந்துள்ளார்.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானவில் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நக்ஷத்ரா, அதன் பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதோடு சினிமா விழாக்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள் என அனைத்தையும் தொகுத்து வழங்கினார். கூடவே நட்சத்திர நாகேஷ் அவர்கள் சேட்டை, வாயை மூடி பேசவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். வாணி ராணி சீரியல் மூலம் சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர், தற்போது ’லட்சுமி ஸ்டோர்ஸ்’ சீரியலில் பாக்ய லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
Advertisment
Advertisements
புன்னகையான முகம், இயல்பான நடிப்பு, துள்ளலான ரொமான்ஸ் காட்சிகள் என நக்ஷத்ராவின் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. நிகழ்ச்சிகளில் ஸ்கர்ட் - டாப், சேலை ஆகிய உடைகளை விரும்பி அணியும் இவரின் டிரெஸ்ஸிங் சென்ஸையும் பாராட்டுகிறார்கள் ரசிகர்கள். சரி அது இருக்கட்டும் மேலே சொன்னபடி, தற்போது சினிமாவிலும் கதாநாயகியாக நடிக்கிறார் நக்ஷத்ரா.
’வணிகன்’ என்ற அந்தப் படத்தின் கதாநாயகனாக ஆனந்த் நாக் நடிக்கிறார். வி.பி.டேனியல் இந்த வணிகன் படத்தை இயக்குகிறார். சார்லி, புட் சட்னி ராஜ்மோகன், கிருத்திகா பாலா ஆகியோரும் இதில் நடிக்கிறார்கள். யதார்த்தமான ஆக்ஷன் த்ரில்லர் படமான இது சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை மையமாகக் கொண்டுள்ளதாம். பாடல்களை கேட்டு விட்டு, குழுவினரை யுவன் சங்கர் ராஜா பாராட்டியதோடு, யூ 1 ரெகார்டஸ் நிறுவனம் மூலம் வணிகன் படத்தின் ஆடியோ, உரிமையையும் வாங்கியிருக்கிறார்.