Nithya Das: சீரியல் நடிகைகளில் நிறைய பேர் சின்ன வயதிலேயே அம்மா ரோல்களில் நடிக்க வந்து விடுவார்கள். ஆனால் நிஜத்தில் அவர்கள் படு இளமையாக மிக குறைந்த வயதில் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது நடிகை நித்யா தாஸும் சீரியல் அம்மாவாகியிருக்கிறார். யாரிவர் என்கிறீர்களா? சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடிகர் பிரித்விராஜின் இரண்டாவது மனைவியாகவும், ஹீரோயின் நிமேஷிகாவின் சித்தியாகவும் நடித்து வருபவர் தான்.
மகள் மற்றும் மகனுடன் நித்யா...
Tamil News Today Live : மெரினா கடற்கரை செல்ல அனுமதி.. டிசம்பர் முதல் வாரத்தில் முடிவு!
நித்யா தாஸ் மலையாளம் மற்றும் தமிழில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்து வருகிறார். இவர் மே 22, 1981 அன்று கேரளாவின் கோழிக்கோட்டில் பிறந்தார். ஜூன் 17, 2007 அன்று குருவாயூரில் அரவிந்த் சிங்கை மணந்தார். 2005 ஆம் ஆண்டில் சென்னைக்குச் செல்லும்போது இவர்கள் சந்தித்துக் கொண்டனர். அரவிந்த் இந்தியன் ஏர்லைன்ஸின் விமானக் குழுவினராக பணிபுரிந்தார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கிறார்கள்.
குடும்பத்துடன்
மலையாள நகைச்சுவை படமான 'ஈ பரக்கும் தாலிகாவில்’ 2001 ஆம் ஆண்டில் காயத்ரி / பசாந்தியாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார் நித்யா. இந்தப் படத்தின் மூலம் ஆசியநெட் திரைப்பட விருதுகளில் அந்த ஆண்டின் சிறந்த புதிய பெண் முகம் விருதை வென்றார். அதைத் தொடர்ந்து கே.மது எழுதிய புலனாய்வு திரில்லரான நரிமன் படத்தில் நடித்தார். 2002 ஆம் ஆண்டில், குஜிஜிகூனனில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். கன்மாஷி என்ற படத்தில், வினீத் குமாருடன் இணைந்து கன்மாஷியாக நடித்தார் நித்யா. 2003 ஆம் ஆண்டில், முக்கிய வெற்றிப் படமான பாலேட்டனில் தேவகியாக தோன்றினார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. அதே ஆண்டில் ’சூந்தா’ மற்றும் ’வரும் வருன்னு வன்னு’ ஆகிய படங்களிலும் நடித்தார்.
’கண்ணான கண்ணே’ மகள்களுடன்...
அதன் பின்னர் இன்னும் பல மலையாளப் படங்களில் நடித்த நித்யா தாஸ், பின்னர் 2006 ஆம் ஆண்டில், தமிழ் திரைப்படமான ’மனதோடு மழைக்காலம்’ படத்தில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இடம்பெற்றார். அதில் நடிகர் ஷாமின் நெருங்கிய தோழியாக நடித்திருந்தார். 2007-ஆம் ஆண்டு, நகரம் படத்தில் பூங்கொடியாகவும், சூர்ய கிரீடம் என்ற திகில் படத்திலும் நடித்திருந்தார் நித்யா.
நித்யா தாஸ்
2007-ம் ஆண்டு, அதாவது தனது திருமணத்துக்குப் பிறகு சீரியல்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் நித்யா. சூர்யா டிவி-யில் ஒளிபரப்பான ‘ஐய்யப்பனும் வாவரும்’ என்ற சீரியலில் ஆயிஷாவாக தொலைக்காட்சிக்கு அறிமுகமானார். 2009-ம் ஆண்டு சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘இதயம்’ சீரியல் மூலம் தமிழுக்கும் அறிமுகமானார். தொடர்ந்து சன் டிவி-யில் ‘காற்றினிலே வரும் கீதம்’, ’பைரவி’, ’அழகு’ ஆகிய சீரியல்களில் தமிழில் நடித்தார். தற்போது ‘கண்ணான கண்ணே’ சீரியலில் ஹீரோயினுக்கு சித்தியாக பாஸிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இளமையான நித்யா தாஸ்...
இட்லி- தோசைக்கும் செம்ம சைட் டிஷ்: சுரைக்காய் கூட்டு செய்முறை
நடனம், திரைப்படங்கள் பார்ப்பது, இசைக் கேட்பது, பயணம் செய்வது அனைத்தும் நித்யாவுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு விஷயங்களாம். சைனீஸ், கான்டினென்டல், தென்னிந்திய உணவு மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் ஆகிய உணவுகள் என்றால் நித்யாவுக்கு அலாதி பிரியமாம்!
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”