நோயெதிர்ப்பு சக்தி, இதய பாதுகாப்பு... வெங்காய புதினா துவையலுக்கு சிம்பிள் ஸ்டெப்ஸ் பாருங்க!
Simple steps to make mint onion chutney in tamil: உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாவதால் மூச்சுப் பிரச்சினைகள், ஆஸ்துமா, சளித் தொல்லைஈ நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருகின்றன. இதற்கு சின்ன வெங்காயம் மிகச்சிறந்த தீர்வாக உள்ளது.
Simple steps to make mint onion chutney in tamil: உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாவதால் மூச்சுப் பிரச்சினைகள், ஆஸ்துமா, சளித் தொல்லைஈ நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருகின்றன. இதற்கு சின்ன வெங்காயம் மிகச்சிறந்த தீர்வாக உள்ளது.
onion pudina thogayal in tamil: மருத்துவ குணம் மிக்க காய்கறி வகைகளில் சின்ன வெங்காயத்திற்கு தனி இடம் உண்டு. இவை நம்முடைய அன்றாட சமையல் முதல் மூலிகை மருந்துகள் தயார் செய்வது வரை முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இவற்றை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் வலிமை பெறுகிறது. மேலும், பருவ கால நோய்த்தொற்றுக்களில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உதவுகிறது.
Advertisment
சின்ன வெங்காயம் உடலுக்கு பல அற்புத நன்மைகளை அள்ளித்தருகிறது. குறிப்பாக இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாவதால் மூச்சுப் பிரச்சினைகள், ஆஸ்துமா, சளித் தொல்லைஈ நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருகின்றன. இதற்கு சின்ன வெங்காயம் மிகச்சிறந்த தீர்வாக உள்ளது.
இவற்றை நாளுக்கு ஒன்று தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த குழாயில் அடைக்கும் கொழுப்பை கரைத்து இதய நோய் வராமல் தடுக்கும்.
Advertisment
Advertisements
சின்ன வெங்காயத்துடன் புதினா சேர்க்கப்படும் உடலுக்கு நல்ல பலத்தையும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.
இப்படியாக ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள சின்ன வெங்காயம் மற்றும் புதினாவில் சுவையான சட்னி எப்படி தயார் செய்வது என்று இங்கு பார்க்கலாம்.
சின்ன வெங்காயம் - புதினா சட்னி தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 12,
கல் உப்பு - தேவையான அளவு.
சின்ன வெங்காயம் - புதினா சட்னி சிம்பிள் செய்முறை:
முதலில் புதினாவை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் சின்ன வெங்காயத்தை தோலுரித்து நன்றாகக் கழுவிக்கொள்ளவும்.
தொடர்ந்து ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைச் சூடாக்கவும்.
பிறகு அதில் உரித்த சின்ன வெங்காயம், புதினா, கறிவேப்பலை, காய்ந்த மிளகாய் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். வெங்காயம் லேசாக நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிடவும்.
வேக வைத்தவற்றை நன்கு ஆறவிட்டு ஒரு மிச்கியில் கல் உப்பு, வேகவைத்த வெங்காய கலவையை போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
இந்த அரைத்த விழுதைச் சிறிய கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ளவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சத்தான சுவையான சின்ன வெங்காய புதினா துவையல் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“