Instant Orange Mousse ( Mousses Recipe) in tamil: கோடைக்காலத்தில் பயணித்து வரும் நாம் நம்முடைய அன்றாட உணவுகளுடன், குளிர்ச்சியான உணவுகள், பானங்கள் மற்றும் பழங்களை சேர்த்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் பழச்சாறையும், ஐஸ்கிரீமையும் கொண்டு தயாரிக்கப்படும் குளிர்ச்சியான ரெசிபிகளில் ஒன்றாக ‘மூஸ்’ உள்ளது. பிரான்ஸ் நாட்டில் பிறந்த இந்த ‘மூஸ்’ ரெசிபி, அதன் அசத்தலான சுவையால் மற்ற நாடுகளுக்கும் பரவியது. ஆரஞ்சு பழத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த அற்புத ‘ஆரஞ்சு மூஸ்’ எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
ஆரஞ்சு ‘மூஸ்' தயார் செய்யத் தேவையான பொருட்கள் :
வெண்ணெய் - 50 கிராம்
சர்க்கரை - 50 கிராம்
வெண்ணிலா ஐஸ் கிரீம் - 1 கப்
ஆரஞ்சுப் பழம் - 1
பால் - 250 மில்லி லிட்டர்
ஆரஞ்சு எசென்ஸ் - ½ தேக்கரண்டி
ஆரஞ்சு ‘மூஸ்' ஈஸி செய்முறை :
முதலில் அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் சுண்டக் காய்ச்சவும். இந்தக் கலவை கெட்டியானதும் இறக்கி குளிரச் செய்யவும்.
பிறகு வெண்ணெய்யை 30 நிமிடங்கள் குளிர்விக்கவும்.
தொடர்ந்து ஆரஞ்சுப் பழத்தை தோல் மற்றும் விதை நீக்கி, சதைப்பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய்யை இட்டு முட்டை அடிப்பான் அல்லது கடைப்பான் கொண்டு நன்றாகக் கிரீம் பதத்தில் அடித்துக்கொள்ளவும்.
பின்னர் அதில் குளிரவைத்தப் பால், வெண்ணிலா ஐஸ்கிரீம், ஆரஞ்சுப் பழத்தின் சதைப்பகுதி மற்றும் ஆரஞ்சு எசென்ஸ் சேர்த்து நன்றாகக் கலக்கி குளிர்சாதனப்பெட்டியில் 1 மணி நேரம் குளிர வைக்கவும். பிறகு குளுகுளு என பரிமாறி சுவைக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.