பப்பாளி, எலுமிச்சை… உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் உணவுகள் இவைதான்!
Top 5 fruits and vegetables to increase oxygen level in body Tamil News: ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் உணவுகள், பழங்கள், மற்றும் காய்கறிகளை முறையாக எடுத்துக்கொண்டால் காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்களை நிச்சயம் தவிர்க்கலாம்.
Oxygen increasing foods in tamil: காற்று மாசுபாடு தற்போது பெரும் கவலையாக மாறியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிகளவில் கற்று மாசுபாடு இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடு ஏற்படுவதால் ஒருவர் யோகா செய்தாலும், உடற்பயிற்சி செய்தாலும் அல்லது மாஸ்க் அணிந்தாலும் உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை. இதனால் நமது உடலில் ஏற்படும் நோய்களைத் தவிர்ப்பதும் கடினமாகிறது.
Advertisment
எனவே, இதிலிருந்து தப்பிக்க மாஸ்க்கைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனமான முடிவு. அதுமட்டுமின்றி, ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் உணவுகள், பழங்கள், மற்றும் காய்கறிகள் போன்றவற்றை முறையாக எடுத்துக்கொண்டால் காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்களை நிச்சயம் தவிர்க்கலாம்.
அந்த வகையில் நமது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் பழங்கள், மற்றும் காய்கறிகளை இங்கு பரிந்துரை செய்துள்ளோம். அவற்றை உங்களது அன்றாட உணவுகளுடன் சேர்த்து கொள்ளவும்.
Advertisment
Advertisements
வாழைப்பழம்: -
உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் பழ வகைகளில் "வாழைப்பழம்" முக்கிய இடத்தை பிடிக்கிறது. இதன் pH மதிப்பு 45 மற்றும் 4.7 ஆக இருந்தாலும் உடலுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
எலுமிச்சை:-
வைட்டமின் சி நிரம்பி காணப்படும் எலுமிச்சை உடலுக்கு ஆற்றலைத் தந்து நோய்கள் வராமல் பாதுகாப்பது போலவே, உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
திராட்சை:-
திராட்சைப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களையும் குறைக்கிறது மற்றும் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது.
பப்பாளி: –
பப்பாளியில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. எனவே தான் இவற்றை சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பப்பாளியின் pH மதிப்பு 8.5க்கு மேல் உள்ளது.
மேலும், இது இரத்த அணுக்களில் ஆக்ஸிஜனை அதிகரிப்பதன் மூலமாக நோயாளியை மீண்டும் ஆரோக்கியமாக்குகிறது.
ப்ரோக்கோலி: -
இந்த பச்சைக் காய்கறியில் பல வகையான வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. கூடவே, ப்ரோக்கோலி உடலுக்கு ஆக்ஸிஜனை வழங்கும் ஒரு சிறந்த மூலமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“