52 வயதில் 5வது திருமணம் செய்த பிக்பாஸ் பிரபலம் – கணவருக்கு 75 வயது

நடிகைகள் திருமணம் செய்வது, பிறகு விவாகரத்து செய்வது மிக சாதாரண நிகழ்வாகும். தமிழ் சினிமா உலகிலும், சீரியல் உலகிலும் அடிக்கடி இந்த மேரேஜ் – டைவர்ஸ் காம்போவை நம்மால் பார்க்க முடியும். பரஸ்பரம் மகிழ்ச்சியுடன் பிரிகிறோம்; இனி வாழ்நாள் முழுவதும் நல்ல நண்பர்களாக இருப்போம் என்று சர்வ சாதாரணமாக…

By: January 22, 2020, 6:48:53 PM

நடிகைகள் திருமணம் செய்வது, பிறகு விவாகரத்து செய்வது மிக சாதாரண நிகழ்வாகும். தமிழ் சினிமா உலகிலும், சீரியல் உலகிலும் அடிக்கடி இந்த மேரேஜ் – டைவர்ஸ் காம்போவை நம்மால் பார்க்க முடியும். பரஸ்பரம் மகிழ்ச்சியுடன் பிரிகிறோம்; இனி வாழ்நாள் முழுவதும் நல்ல நண்பர்களாக இருப்போம் என்று சர்வ சாதாரணமாக சொல்வார்கள்.


பண்பாட்டிற்கு பேர் போன தமிழகத்திலேயே இந்த நிலைமை எனில் மேற்கத்திய நாடுகளில் சொல்லவா வேண்டும்?

அனிருத் முதல் கிசுகிசு நட்பு வரை – சர்ச்சைகளை சாதாரணமாக்கி சாதிக்கும் ஆண்ட்ரியா

பமீலா ஆண்டர்சன்.. உங்களில் பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். சிலர் ரசிகராக இருப்பீர்கள். அவருக்கு வயது 52. இந்நிலையில் அவர் தற்போது ஐந்தாவதாக திருமணம் செய்திருக்கிறார்.

Jon Peters என்ற தயாரிப்பாளரை தான் பமீலா திருமணம் செய்து கொண்டுள்ளார். 75 வயதாகும் ஜானுக்கும் இது ஐந்தாவது திருமணம் தான்.

இவர்கள் திருமணம் சென்ற திங்கட்கிழமை கலிஃபோர்னியாவில் நடைபெற்றுள்ளது.

Jon Peters பேட்மேன் படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

பமீலா டெனிஸ் ஆண்டர்சன் கனடிய-அமெரிக்க நடிகை. மாடல் மற்றும் விலங்கு உரிமை ஆர்வலராகவும் இருக்கிறார். (நடிகைகள்னாலே விலங்குகள் ஆர்வலர்கள் தானே! )

ஹோம் இம்ப்ரூவ்மென்ட், பேவாட்ச், மற்றும் வி.ஐ.பி. போன்ற இவர் நடித்த தொலைக்காட்சி தொடர்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. பிளேபாய் பத்திரிகையின் அட்டைப் படத்தில் இடம் பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி, பிளேபாய் அட்டைப்படத்தில் அதிகம் இடம் பெற்ற ஒரே பிரபலம் நம்ம பமீலா தான்.

ஹோம்லி, கவர்ச்சி இரண்டிலும் ஹாட் – பாப்ரி கோஷ் ஸ்பெஷல் புகைப்படங்கள்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Pamela anderson marries for fifth time jon peters

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X