Pongal 2020 Wishing everyone very happy pongal : காலையில் இருந்து பொங்கலுக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டே இருக்கின்றோம். ஆனாலும் அது உங்களுக்கு போதுமானதாக இருக்காது என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஏன் என்றால் நாளையில் இருந்து தமிழர் திருநாள் மிகவும் சிறப்பாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும்.
கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,...
மேலும் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் மிகச் சிறப்பாக இந்நாள் கொண்டாடப்படும். உங்களின் உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துகள் அனுப்ப வேண்டுமா? இந்த பக்கத்தில் க்ளிக் செய்து நீங்கள் உங்களுக்கு விருப்பமான இமேஜை டவுன்லோடு செய்து அனுப்பிடுங்கள்.
பெண்கள் பொங்கல் அன்று காலையில் எழுந்து தங்கள் வீட்டு வாசலில் மிகப்பெரிய கோலம் போட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் என்ன கோலம் போட என்பது தான் அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாகவே இருக்கும். என்ன செய்வது என்று உங்களுக்கு குழப்பம் இருந்தால் கவலைய விடுங்க.
மேலும் படிக்க : பொங்கல் 2020 : தைத்திருநாள் காலையில் என்ன கோலம் போடலாம்?
பொங்கல் வேற வந்துருச்சு. பொங்கல் பரிசு தர்றோம்னு கவர்மெண்ட் சொன்னாலும் சொல்லுச்சி எங்கன திரும்புனாலும் நாந்தான் தெரியுறேன்னு வடிவேலே வருத்தப்பட்டுருப்பாரு. அவ்வளவு மீம்ஸ்களை பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் சிறப்பான பொங்கல் கொண்டாட்டம் போய்கிட்டு தான் இருக்கு. இந்த வருசம் நெட்டிசன்கள் மத்தியில் ஹிட் அடித்த பொங்கல் மீம்ஸ் இதோ உங்களுக்காக. வயிறு வலிக்க வெடிச்சு சிரிச்சு சந்தோசமா இருந்தா அதுக்கு நாங்க தான் பொறுப்பு என்பதை கூறிக் கொண்டு!
மேலும் படிக்க : இது மீம்ஸ் பொங்கல் பாஸ்…. திரும்புன பக்கமெல்லாம் தலைவரு தான் தெரியுறாரு!
பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் விவசாயத்துக்கு உறுதுணையாக விளங்கும் பசுக்களையும், எருதுகளையும், விவசாயக் கருவிகளையும் வழிபடுகிறோம். அதுமட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போன்ற வீரவிளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன. மேலும் படிக்க : தமிழர் திருநாளில் தமிழர்களின் வீர விளையாட்டுகள்
தித்திக்கும் வெல்லமும், கரும்பும், புதுமஞ்சளும், நெல்லுமாய் உங்களின் வாழ்வு இனிமையாகவும், வளமுடன் இருக்க உங்களுக்கு முதலில் எங்களின் பொங்கல் நல்வாழ்த்துகள். சென்னை, கோவை, திருச்சி, மதுரை என்று நகரங்களில் வேலை செய்பவர்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர் திரும்பியிருப்பீர்கள் என்று நம்புகின்றோம். வீட்டில் மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாடுங்கள். எங்களின் வாழ்த்துகளையும் மனதார ஏற்றுக் கொள்ளுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.