பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவருக்கு வயத 46. அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டவுடன், உடனடியாக பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவர் உடல்நிலை மோசமடைய, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவு திரைப்பிரபலங்கள், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நல்ல ஆரோக்கியமான நபர், மாரடைப்பில் இறந்தது தான் சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
மாரடைப்புக்கு வழிவகுக்கும் நோய் பாதிப்புகள்
நோய்டாவில் சாரதா மருத்துவமனையின் இதய மருத்துவ நிபுணர் டாக்டர் சுபேந்து மொஹந்தி கூறுகையில், "ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது மிகவும் பொதுவானதாக மாறிவருகிறது.
குறிப்பாக, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்பு உள்ள நோயாளிகள் அதனைக் கட்டுக்குள் வைப்பது மட்டுமின்றி தொடர்ந்து மருத்துவரை அணுக வேண்டும்" என கூறுகிறார்.
ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையின் இதயவியல் துறையின் இயக்குநரும் தலைவருமான மருத்துவர் சஞ்சய் குமார் கூறுகையில், " அதிகளவில் புகைபிடித்தல், இதய நோய் மற்றும் நீரிழிவு நோயின் குடும்ப வரலாறு கொண்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. வெளிநாட்டினருடன் ஒப்பிடுகையில் இந்தியர்களுக்கு அதிகளவில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முக்கிய காரணம், உடற்பயிற்சி செய்யாததது தான்.
அதீத உடற்பயிற்சி ஆபத்து
அதே சமயம், அதிகளவில் உடற்பயிற்சி செய்வதும் ஆபத்தை ஏற்படுத்தும். மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்களுக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்ட பல சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன். 40 வயதிற்குப் பிறகு, கார்டியோ உடற்பயிற்சிகளைப் பின்பற்றுவது நல்லது. கடுமையான உடற்பயிற்சிகள், உடலில் பாதிப்பை ஏற்படுத்தி மாரடைப்பு வழிவகுக்க வாய்ப்புள்ளது" என கூறுகிறார்.
2019 தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, 2014-2019 க்கு இடையில் மாரடைப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 53 சதவீதம் அதிகரித்துள்ளது.
முதல் 1 மணி நேரத்தில் அதிக உயிரிழப்புகள்
மேலும் குமார் கூறுகையில், " மாரடைப்புக்கு என்பது இதயத்தின் ஒழுங்கற்ற துடிப்பு தான். பெரும்பாலும், மாரடைப்பு ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் பலர் உயிரிழக்கின்றனர். அதே சமயம், மருத்துவமனைக்கு விரைவாக வருபவர்கள் காப்பாற்றப்படுகின்றனர்.
ஆனால், முதல் ஒரு மணி நேரத்தில், மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை நீங்கள் உணராமல் இருந்தால் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு உயிரைப் பறித்துவிடும் என்பது தான் உண்மை.
பலவீனமான இதயம், எலக்ட்ரோலைட் அளவுகளின் மாறுதல் உள்பட பல்வேறு காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே, மாரடைப்பு என்பது நெஞ்சு வலி என்று மட்டும் கூற முடியாது. இருப்பினும், மாரடைப்பில் நெஞ்சு வலி பொதுவான காரணங்களில் ஒன்றாகும்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.