வித்தியாசமாக தேங்காய் பால் ரசம்… இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கு இது தான் பெஸ்ட்!
thengai paal rasam seivathu eppadi tamil: இரும்பு மற்றும் நார்ச்சத்து நிரம்பி காணப்படும் இந்த வித்தியாசமான மற்றும் சுவையான தேங்காய் பால் ரசம் உங்களது உடலில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க உதவுகிறது.
thengai paal rasam seivathu eppadi tamil: இரும்பு மற்றும் நார்ச்சத்து நிரம்பி காணப்படும் இந்த வித்தியாசமான மற்றும் சுவையான தேங்காய் பால் ரசம் உங்களது உடலில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க உதவுகிறது.
Rasam recipes tamil: தொன்மையான உணவு வகைகளில் ரசமும் ஒன்று. இந்த அற்புதமான ரசம் பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது. இவற்றில் நாம் சேர்க்கும் மிளகு, சீரகம், பூண்டு போன்றவை நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு ஜுரம், சளி, கபம் போன்ற பிணிகளை அடித்து விரட்டுகிறது.
Advertisment
மேலும், இருமல், தலை சுற்றல் போன்ற பாக்டீரியாவால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது. அதோடு சுவாசப் பிரச்சினைகளுக்கு இவை ஒரு சிறந்த மூலிகை மருந்தாகவும் செயல்படுகிறது.
ரசம்
இப்படி எண்ணற்ற ஆரோக்கிய மற்றும் மருத்துவ நன்மைகளை உள்ளடக்கியுள்ள ரசத்தில் ஒரு வித்தியாசமான மற்றும் சுவையான தேங்காய் பால் ரசம் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
Advertisment
Advertisements
தேங்காய் பால் ரசம் செய்யத் தேவையான பொருட்கள்
தேங்காய் பால் ரசம்
தேங்காய் பால் - 1 கப் (கெட்டியானது) தேங்காய் பால் - 2 கப் (தண்ணீர் கலந்தது) காய்ந்த அல்லது வர மிளகாய் - 4 புளி - எலுமிச்சை அளவு உப்பு - தேவையான அளவு பூண்டு - 7 பற்கள் கடுகு - 1/2 ஸ்பூன் எண்ணெய் - 1 ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு மஞ்சள் - 1/4 ஸ்பூன்
தேங்காய் பால் ரசம் சிம்பிள் செய்முறை
முதலில் பூண்டு மற்றும் கொத்தமல்லியை நறுக்கி கொள்ளவும்.
பிறகு புளியை தண்ணீர் கலந்துள்ள தேங்காய் பாலில் சேர்த்து ஊற வைத்து நன்றாக கரைத்து வைத்துக்கொள்ளவும். அவற்றுக்கு தேவையான அளவு உப்பும் சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து தாளித்துக்கொள்ளவும்.
பின்னர், பூண்டு சேர்த்து வதக்கிக்கொள்ளவும். தொடர்ந்து மஞ்சள் தூளும் சேர்த்து வதக்கவும்.
தற்போது கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
அவற்றின் பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்துவிடவும். பிறகு, கொதி அடங்கியதும் கெட்டி தேங்காய் பால் சேர்த்துக்கொள்ளவும்.
தேங்காய் பாலை கொதிக்கும் போது ஊற்றினால் அவை திரிந்து விடும். எனவே அதில் கவனமாக இருத்தல் வேண்டும்.
கடைசியாக கொத்தமல்லி தழைகளை தூவி கீழே இறக்கினால் சுவையான தேங்காய் பால் ரசம் தயாராக இருக்கும்.
இரும்பு மற்றும் நார்ச்சத்து நிரம்பி காணப்படும் இந்த வித்தியாசமான மற்றும் சுவையான தேங்காய் பால் ரசம் உங்களது உடலில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க உதவுகிறது. இவற்றை நீங்கள் சூப் வடிவிலும் பருகி மகிழலாம்.
தேங்காய் பால் ரசம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“