பாரதி கண்ணம்மா செளந்தர்யாவை பாலச்சந்தர் படத்துல நோட் பண்ணியிருக்கீங்களா?

25-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சீரியல்களிலும், நிகழ்ச்சிகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

Roopa Sree
Roopa Sree

Roopa Sri : வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து, அதன் பிறகு அங்கு சரியான வாய்ப்புகள் அமையாவிட்டாலும், இல்லை இனி சினிமா வேண்டாம் என்ற எண்ணம் வந்தாலும் நடிகைகள் அடுத்து தேர்ந்தெடுப்பது டிவி-சீரியலை தான். அந்த வகையில் நடிகை ரூபா ஸ்ரீ-யும் சினிமாவில் இருந்து தொலைக்காட்சிக்கு வந்தவர் தான்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் பிளவு?! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

சென்னையில் பிறந்து வளர்ந்த ரூபா, தனது 13 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். மலையாளத்தில் வெளியான ‘கள்ளனும் போலீசும்’ தான் அவரது முதல் படம். அதன் பிறகு, ‘எங்க வீட்டு வேலன்’, ‘பொண்டாட்டியே தெய்வம்’, ‘இதய நாயகன்’, ‘எல்லாமே என் ராசா தான்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். குறிப்பாக இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில், பிரபு, ரமேஷ் அரவிந்த் நடித்த டூயட் படத்தில், அவர்களுக்கு தங்கையாக நடித்தார்.

Roopa Sree
கணவருடன் ரூபா ஸ்ரீ

திருமணத்துக்குப் பிறகு சினிமாவுக்கு முழுக்குப் போட்ட ரூபா, அதன் பிறகு சீரியல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 25-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சீரியல்களிலும், நிகழ்ச்சிகளிலும் அவர் பணியாற்றியுள்ளார். தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதியின் அம்மாவாக நெகட்டிவ் ஷேடில் நடித்து வருகிறார்.

”வயசுங்கறது வெறும் நம்பர் தான்” – சிம்ரனின் டான்ஸைப் பார்த்தால் புரியும்!

ரூபாவுக்கு மோகன்லால் – ஷோபனா தான் பிடித்த நடிகர், நடிகையாம். அதோடு புட்டும், கடலை கறியும் மிகவும் பிடித்த உணவாம். பச்சையும், வெள்ளையும் பிடித்த நிறங்களாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Roopa shree bharathi kannamma soundarya

Next Story
அட இந்த ஆப் செமயா இருக்கே… உடனே இன்ஸ்டால் பண்ணுங்க, நண்பர்களோட ஜமாய்ங்கwhatsapp, instagram , auto reply to chat messages, auto reply in whatsapp, auto reply in telegram, auto reply to chat messages app, how to do auto reply to chat messages , how to send auto reply to chat messages
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com