உடலில் ஆங்காங்கே தசைகள் தொங்கும் அவற்றை எப்படி சரி செய்வதுஎன்று மருத்துவர் சிவராமன் கூறுவது பற்றி பார்ப்போம்.
வயதாக ஆக உடலில் ஆங்காங்கே தசைகள் தொங்கும் அதற்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருக்க வேண்டும். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது அழகியல் சார்ந்த விஷயம் மட்டும் கிடையாது அது உடலின் ஆரோக்கியம் சார்ந்த விஷயமும் ஆகும்.
இதற்கு முதலில் உடற்பயிற்சியை கூட்ட வேண்டும் நடைப்பயிற்சி,ஜும்பா, சூரிய நமஸ்காரம், யோகா போன்றவற்றை தினசரி செய்ய வேண்டும்.
தசைகள் இருகுவதற்கு தகுந்தார் போல ஒரு சில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். மூச்சுப் பயிற்சி, யோகா, நடை பயிற்சி சிறந்தது. மேலும் இவற்றை உணவு மூலமாகவும் சரி செய்யலாம் அதற்கு கொள்ளு எடுத்துக் கொள்ளலாம்.
கொள்ளு ரசம், கொள்ளு பருப்பு சட்னி, தாளிப்பு, கொள்ளு குழம்பு போன்றவற்றை சாப்பிடலாம். குறிப்பாக பெண்கள் அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் மாதவிடாய் பிரச்சனை வரும். அதுமட்டுமின்றி பழங்கள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் ஆங்காங்கு தொங்கும் சதைகளை சரி செய்ய முடியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“