சமந்தா அழகுக்கு இந்த ஸ்மூத்தி தான் காரணமாம்: உங்களுக்கு ஆசை இல்லையா?

Samantha Health drinks smoothie: சமந்தா அக்கினேனி சுத்தமான ஆரோக்கிய, உணவு இலக்குகளை ரசிகர்களுக்கும் நிர்ணயித்து வருகிறார்.

Samantha Health drinks smoothie: சமந்தா அக்கினேனி சுத்தமான ஆரோக்கிய, உணவு இலக்குகளை ரசிகர்களுக்கும் நிர்ணயித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
Samantha Akkineni Healthy Smoothie Recipe

Samantha Akkineni Tamil News

Samantha Akkineni Tamil News, Samantha Health drinks smoothie: சமந்தா அக்கினேனி ஆரோக்கியமான உணவைப் பின்பற்றி வருகிறார். அதுவும் சமீப நாட்களாக சுத்தமான ஆரோக்கிய, உணவு இலக்குகளை ரசிகர்களுக்கும் நிர்ணயித்து வருகிறார். அவரது வீட்டுத் தோட்டத்தில் விளைந்த மைக்ரோகிரீன்கள் தான் அதற்கு சான்று.

’இவ என்ன சொக்குப்பொடி போட்டாளோ?” என்னாச்சு காதம்பரிக்கு?

Advertisment

Samantha Akkineni Healthy Smoothie Recipe கீரைகள்

சமந்தா தினமும் காலையில் ஒரு ஆரோக்கியமான ஸ்மூத்தியை குடிப்பதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமிற்கு அழைத்துச் சென்ற அவர்,  தொடர்ச்சியான இன்ஸ்டாகிராம் கதைகளில், ஸ்மூத்தி தயாரிக்க அவர் பயன்படுத்திய பொருட்களைக் காட்டினார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ஆரோக்கியத்தைக் கொண்டிருக்கிறது.

Samantha Akkineni Healthy Smoothie Recipe ஸ்மூத்தியில் சேர்க்கப்பட்டுள்ள விதைகள்

Samantha Health drinks smoothie: சமந்தா ஸ்மூத்தி டிரிங்ஸ்

தேவையானப் பொருட்கள்

* இலை கோஸ் கீரை

* பசலைக் கீரை

*செலரி

*ஆளி விதைகள்

* ஒமேகா மீல் மிக்ஸ் (ஆரோக்கியமான விதைகளின் கலவை)

* சியா விதைகள்

* ஃப்ரோஸன் வாழைப்பழம்

* தேங்காய் தண்ணீர்

செய்முறை

Advertisment
Advertisements

* ஆளி விதைகள், ஒமேகா மீல் மிக்ஸ், மற்றும் சியா விதைகளை தேங்காய் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

* இதற்கிடையில், கீரைகள் மற்றும் செலரி ஆகியவற்றை 15 நிமிடங்களுக்கு கழுவ வேண்டும்.

* ஒரு பிளெண்டரில், மேலே உள்ள பொருட்களுடன் உறைந்த வாழைப்பழத்தை சேர்க்கவும். "வேண்டுமென்றால் இதோடு புரோட்டீன் பவுடரை சேர்க்கலாம்" என்று சமந்தா குறிப்பிட்டுள்ளார். இதனை நன்றாக அரைத்தால் ஸ்மூத்தி ரெடி!

Samantha Akkineni Healthy Smoothie Recipe ஸ்மூத்தி ரெடி!

மூத்த தலைவர்களுக்கு காங்கிரஸ் ஏன் செவிசாய்க்க வேண்டும்?

இதன் பயன்கள்

ஆளி விதைகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவற்றில் ஒமேகா -3 கொழுப்புகள் மற்றும் லிக்னன்கள் அதிகம் உள்ளன. அதோடு ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஈஸ்ட்ரோஜன் பண்புகளைக் கொண்டுள்ளதாக ஹெல்த்லைன் தெரிவித்துள்ளது. சியா விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், புரதம் மற்றும் ஃபைபர் ஆகியவை நிறைந்துள்ளன. ஸ்மூத்தியில் பயன்படுத்தப்படும் கீரை மற்றும் பச்சை காய்கறிகளின் மகத்தான நன்மைகளைப் பற்றி குறிப்பிட தேவையில்லை.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Food Recipes Healthy Life

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: