New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/04/Sayyeshaa-dance-video-goes-viral.jpg)
Sayyeshaa dance video goes viral
Sayyeshaa dance video goes viral
Sayyeshaa: ஜெயம் ரவியின் ‘வனமகன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. பிரபல பாலிவுட் நடிகர் சுமீத் சைகலின் மகளான இவர், கஜினிகாந்த் திரைப்படத்தில் உடன் நடித்த நடிகர் ஆர்யாவை காதலித்து, திருமணம் செய்துகொண்டனர். தற்போது ஆர்யாவும் சாயிஷாவும் இணைந்து, ‘டெடி' திரைப்படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர்.
”டிவி-க்கு வரலைன்னா நான் என்னவா இருந்திருப்பேன்…” – விஜய் டிவி பிரியங்கா
தற்போது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் பூட்டப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் அனைவரும், வீட்டில் இருந்தபடியே தாங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் புகைப்படமாகவும், விடியோவாகவும் பதிவிட்டு வருகிறார்கள். அதோடு தங்களது ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருக்க அவ்வப்போது லைவிலும் பேசுகிறார்கள்.
மே 3-க்கு முன்பு பயணிகள் ரயில் இயங்குமா? ரயில்வே அமைச்சகம் விளக்கம்
இந்நிலையில், சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாகிவருகிறது. பிரபல அமெரிக்க பாடகியும் நடிகையுமான ஜெனிஃபர் லோபஸின் #JLoSuperBowlChallenge சவாலை மிதிலா பால்கர், சன்யா மல்ஹோத்ரா போன்ற பல பிரபலங்களைத் தொடர்ந்து, நடிகை சயிஷாவும் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த சேலஞ்சில் பாடலுக்கு ஏற்றவாறு அழகான மூவ்மென்டுகளை கொடுத்திருக்கும் சாயிஷா, அந்த வீட்யோவை தனது டிக்டாக் மற்றும் பிற சமூக தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களை மிகவும் கவர்ந்துவருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.