நாம் வீட்டில் சமைக்கும் உணவுகள் சில நேரங்களில் மீச்சமாகும். அவற்றை வெளியே வைத்தால் கெட்டுப்போய்விடும் என்பதற்காக, பிரிட்ஜில் வைப்பது வழக்கம். அதில் வைக்கும் உணவுகள் பல நாட்கள் ஆனலும் அப்படியே பிரஷாக இருக்கும்.
அதே சமயம், சூடான உணவுகளை பிரிட்ஜில் வைக்கக்கூடாது என்பதை பலரும் கூறி கேட்டிருப்பீர்கள். ஏன் என கேட்டால் நிச்சயம் அவர்களுக்கு பதில் தெரியாது. ஆனால், இந்த டாக் பரவலாக அனைவரிடமும் உள்ளது. இதற்கு விடையை பலரும் கூகுளிலும் தேடியுள்ளனர். நீண்ட நாள் குழப்பதற்கான விடையை தான் இச்செய்திதொகுப்பில் காணப்போகிறீர்கள்.
“is it danger to put hot food in the fridge” என்ற கேள்விக்கு, நிச்சயம் இல்லை என்று தான் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா அரசின் அதிகார்ப்பூர்வ இணையதளமான FoodSafety.gov,சூடான உணவை ஃப்ரிட்ஜில் வைப்பது சரியாகும். அவற்றில் ஆபத்து இல்லை என தெரிவித்துள்ளது. அதே போல்,
வாஷிங்டன் மாநில சுகாதாரத் துறை, சூடான உணவை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு முன் குளிர்விக்க வேண்டும் என்பது கட்டுக்கதை என கூறுகிறது.
சமைத்த இரண்டு மணி நேரத்திற்குள் உணவை குளிர்சாதனப் பெட்டியில் வைக்குமாறு அமெரிக்க வேளாண்மைத் துறை (USDA) பரிந்துரைக்கிறது. இவ்வாறு செய்வது பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது.
USDA கூற்றுப்படி, பாக்டீரியாக்கள் 40 F மற்றும் 140 F வெப்பநிலைகளுக்கு இடையே வேகமாக வளரும். எனவே சூடான உணவை நேரடியாக குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம். இல்லையெனில் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு முன்பு ஐஸ் அல்லது குளிர்ந்த நீர் மூலம் அதனை விரைவாக குளிர்விக்க செய்யலாம்" என்கிறது.
சூடான உணவு அதிகளவில் இருக்கும் பட்சத்தில், அதனை ஒரே பாத்திரத்தில் வைக்காமல் குட்டி குட்டி பாத்திரத்துக்கு மாற்றி பிரிட்ஜில் வைப்பது சிறந்தது ஆகும்.
வர்ஜீனியா டெக்கின் உணவுப் பாதுகாப்பின் போஸ்ட்டாக்டோரல் அசோசியேட் Minh Duong கூறுகையில், "குளிர்சாதனப் பெட்டிகளை 40 F அல்லது அதற்கும் குறைவாக அமைப்பது அவசியமாகும். குறிப்பாக, பிரிட்ஜில் போதுமான காற்றோட்டம் இருப்பது முக்கியமாகும். நீங்கள் பாத்திரங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைப்பது தவிர்த்தால் மட்டும் போதுமானது.அவை குளிர்சாதன பெட்டியில் காற்றின் சீரான விநியோகத்தைத் தடுக்க வழிவகுக்கும்" என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil