ஏற்கனவே செய்து வந்த உடற்பயிற்சிகள் உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருந்தால், புதிய ஒன்றை முயற்சி செய்வதற்கு சரியான தருணம் இது. இந்த முடக்கம் நாம் இதுவரை செய்யாத பல விஷயங்களை செய்துப் பார்க்க அற்புதமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் ஹூலா வளையத்தை எடுத்துக் கொள்ளலாம். நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் தான் இதனை முயற்சி செய்திருக்கிறார். பேக்கிங் மற்றும் சமையல் வேலைகளுக்கு இடையே, ஹுலா வளைய பயிற்சி டுடோரியலையும் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார்.
எம்.எல்.ஏ விஜயதரணி இன்று மாலை 05:30 மணிக்கு நம்முடன் ஐ.இ.தமிழ் முகநூல் நேரலையில்!
இதன் பயன்கள் என்னென்ன?
இந்த ஹூப்பிங் முழு உடலுக்கும் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். இது கலோரிகளை எரிக்கவும், இடுப்பைச் சுற்றியுள்ள எடையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், மெலிதான மற்றும் வலுவான இடுப்புக்கு பெரிதும் உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உதவும் என்று கருதப்படுகிறது.
தேவையான கவனம் மனதை ஒருநிலைப்படுத்தி, எண்டோர்பின்களை வெளியிடுவதன் மூலம், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது.
எப்படி செய்வது?
நேராக நின்று, முதுகெலும்பை நேராக வைக்கவும். உங்கள் எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி, உடலை லேசாக ஃபீல் பண்ண செய்யுங்கள்.
முழங்கால்களில் அல்லது இடுப்புக்குக் கீழே அசைவு ஏற்படும்போது கால்களை முடிந்தவரை நேராக வைத்திருக்க வேண்டும். முதலில் இடுப்பைச் சுற்றி வளையம் சுழலும் போது, உங்கள் முதுகெலும்பை நேராக வைத்து, அசைவுகளில் எச்சரிக்கையாக இருங்கள்.
வளையம் உடலின் முன்புறத்துடன் தொடர்பு கொள்ளும்போது, அதை தள்ளுவதற்கு முன்னோக்கி சாய்ந்து கொள்ளுங்கள். ஆனால் அது பின்புறத்தைத் தொடும்போது, வேகத்தைத் தொடர பின்னோக்கி கவனம் செலுத்துங்கள்.
கல்லூரிகள் திறப்பு 2 மாதம் தள்ளிப் போகும்? செப்டம்பரில் திறக்க நிபுணர்கள் பரிந்துரை
டிப்ஸ்
பெரிய வளையத்தைத் தேர்வு செய்துக் கொள்ளுங்கள். பெரிய அளவு, மெதுவாக இடுப்பைச் சுற்றி சுழலும். இது நிலையான இயக்கத்திற்கு ஏற்ப உடலுக்கு நேரம் கொடுக்கும்.
ஹுலா ஹூப்பிங் என்பது தாளத்தைப் பற்றியது. நீங்கள் விரும்பும் மற்றும் இயக்கத்துடன் செல்லும் சரியான இசையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
ஹுலா ஹூப்பிங் செய்யும் போது வீடியோ எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் இதைச் சரியாகச் செய்கிறீர்களா என்பதைக் கவனிக்க முடியும்.
முதல் முறையிலேயே அதைச் சரிசெய்ய விரைந்து செல்வதை விட, செயல்முறையையும் பயணத்தையும் அனுபவிக்கவும். பின்னர் அது சரியான வேகத்தில் உங்களிடம் வரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.