Advertisment

நடிகை பொய் சொல்ல மாட்டாங்க... முக அழகுக்கு காஃபி யூஸ் பண்றாங்களாம்!

Skin Care coffee face pack: மிருதுவான, பளபளப்பான சருமத்துக்கு காபி ஸ்க்ரப் - அந்த நடிகையே இதைத் தான் யூஸ் பண்றாங்க

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coffee face mask scrub, home made coffee face mask, how to make coffee face mask, coffee skin benefits,முகத்தை பொலிவாக்குவது எப்படி, முகத்தை அழகாக்குவது எப்படி?

Skin Care Tamil News Skin Care coffee face pack how to make coffee face mask- முகத்தை அழகாக்குவது எப்படி?

Skin Care Tamil News: சமீபத்தில் Jawaani Jaaneman திரைபடத்தில் நடித்த நடிகை ஆலயா தனது சருமத்தை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைப்பதற்கு தான் பயன்படுத்தும் முகப்பூச்சுப் பற்றி Instagram ல் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

நடிகை ஆலயா Instagram ல் வெளியிட்ட வீடியோவில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அந்த காபி முகப்பூச்சு அல்லது ஸ்கரப்பை எவ்வாறு செய்வது என்று காண்பித்திருந்தார்.

”எனது நிலையான எதிரியான முக வீக்கத்தை போக்க சமீபத்தில் தான் நான் ஒரு தீர்வை கண்டுபிடித்தேன். எனது விருப்பமான முகப்பூச்சு / ஸ்கரப் குறித்து இங்கே கூறியுள்ளேன், இது எந்தவிதமான முக வீக்கத்தையும் குறைத்து முகத்தின் மேல் பரப்பில் உள்ள இறந்த உயிரணுக்களை நீக்கி முகத்தை மிருதுவானதாகவும் பளபளப்பானதாகவும் மாற்றிவிடும்”, என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்துக் காரங்க புத்திசாலிங்க... நீங்களும் உணவில் இதை ஏன் சேர்க்கக் கூடாது?!

காபி பல வழிகளில் சருமத்துக்கு நன்மை செய்கிறது. caffeine உள்ளடக்கம் சருமத்தில் ஏற்படுகின்ற சுருக்கத்தையும் குறைக்கிறது. காபியை நேரடியாக சருமத்தில் பூசுவதால் முகத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகள், சூரிய வெப்பதால் ஏற்படுகின்ற கருவளையங்கள், முகம் சிவத்தல் ஆகியவற்றை குறைக்கிறது. காபியில் உள்ள chlorogenic அமிலம் மற்றும் melanoidins ஆகியவை அழற்சி எதிர்ப்பு விளைவுகள் கொண்டுள்ளது.

Skin Care coffee face pack: இந்த முகப்பூச்சை எவ்வாறு செய்ய வேண்டும்?

ஆலயா கூறியது,

தேவையான பொருட்கள்

2 தேக்கரண்டி – காபி பொடி (Ground coffee powder)

1.5 தேக்கரண்டி – சக்கரை

1 தேக்கரண்டி – ஆலிவ் எண்ணெய்

1 தேக்கரண்டி – தேன்

1 தேக்கரண்டி – பால்

செய்முறை

ஒரு சிறிய பாத்திரத்தில் அனைத்து தேவையான பொருட்களையும் நன்றாக கலந்து அதை முகத்தில் தடவ வேண்டும். அதை அப்படியே 20 நிமிடங்கள் உலர விடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Healthy Life Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment